சிம்பியாசிஸ் இண்டர்நேஷன் எஸ்இடி - ஜெனரல் (சிம்பயாசிஸ் எண்ட்ரன்ஸ் டெஸ்ட்), எஸ்இடி - சட்டம், சிம்பயாசிஸ் லா அட்மிசன் டெஸ்ட் (எஸ்எல்எடி) மற்றும் சிம்பயாசிஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி எஞ்சினீரிங் என்ட்ரன்ஸ் எக்ஸாம் (எஸ்ஐடிஇஇஇ) உள்ளிட்ட தனது பல்வேறு பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதிகளை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 76 நகரங்களில் நடைபெறும் கணினி அடிப்படையிலான தேர்வுக்கு விருப்பமுள்ள மாணவர்கள் சம்மந்தப்பட்ட தேர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ பதிவு இணைப்பு மூலம் ஒவ்வொரு தேர்வு குறித்த விரிவான தகவல்களுடன் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
சிம்பியாசிஸ் இண்டர்நேஷனல் எஸ்இடி 2024 பதிவு செய்முறை 2023 டிசம்பர் 13 அன்று தொடங்கியது. பிபிஏ ஹானர்ஸ்/ ஹானர்ஸ் வித் ரிசர்ச், பிசிஏ - ஹானர்ஸ் / ஹானர்ஸ் வித் ரிசர்ச், பிபிஏ (தகவல் தொழில்நுட்பம்) - ஹானர்ஸ் / ஹானர்ஸ் வித் ரிசர்ச், பிஏ (மாஸ் கம்யூனிகேஷன்) - ஹானர்ஸ் / ஹானர்ஸ் வித் ரிசர்ச், பிஎஸ்சி (எகனாமிக்ஸ்) - ஹானர்ஸ் / ஹானர்ஸ் வித் ரிசர்ச், பிஎஸ்சி (அப்ளைட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ்) - ஹானர்ஸ் / ஹானர்ஸ் வித் ரிசர்ச் படிப்புகளில் சேர இந்த தேர்வை எழுத வேண்டும், விண்ணப்ப நுழைவாயில் அடுத்த நான்கு மாதங்களுக்குத் திறந்திருப்பதால், விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைனில் 2024 ஏப்ரல் 12 வரை விண்ணப்பிக்கலாம். எஸ்இடி 2024 மே 5 மற்றும் மே 11 தேதிகளில் நடைபெறும்.
சிம்பயாசிஸ் லா அட்மிஷன் டெஸ்ட் (எஸ்எல்எடி) 2024 அல்லது எஸ்எல்டி 2024 சிபிடி முறையில் 2024 மே 5 (ஞாயிறு) மற்றும் மே 11 (சனிக்கிழமை) தேதிகளில் எஸ்எல்எடி 2024 தேர்வு மையங்களில் நடைபெறும். பி.ஏ.எல்எல்.பி (ஹான்ஸ்), பி.பி.ஏ. எல்எல்.பி (ஹான்ஸ்), பி.ஏ எல்எல்.பி, பி.பி.எ எல்எல்.பி ஆகிய பாடத்திட்டத்தில் சேர இந்த தேர்வை எழுதலாம். இதற்காகப், பூனே, நொய்டா, ஐதராபாத், நாக்பூர் நகரங்களிலுள்ள அனைத்து சிம்பியாசிஸ் சட்டப் பள்ளிகளிலும் , சிம்பியாசிஸ் தேர்வு செயலகம் எஸ்எல்ஏடி 2024 விண்ணப்ப செய்முறையை 2023 டிசம்பர் 13 அன்று தொடங்கியது.
எஸ்ஐடிஇஇஇ 2024 விண்ணப்ப செய்முறை ஆன்லைன் மூலம் 2024 மே 5 (தேர்வு 1) மற்றும் 2024 மே 11 (தேர்வு 2) தேதிகளில் ஏராளமான பிடெக் பாடத் திட்டங்களுக்கு நடைபெற உள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன் ஜினியரிங், மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் ஆகிய இளங்கலை தொழில்நுட்ப படிப்புகளில் சேர இந்த தேர்வை எழுதலாம். எஸ்ஐடிஇஇஇ 2024 தேர்வு எழுத விருப்பமுள்ளோர் கடைசி நாளான 2024 ஏப்ரல் 12க்குள் விண்ணப்பங்களை நிறைவு செய்ய வேண்டும்.
சிம்பயாசிஸின் அதிகாரப்பூர்வ வலைதளமான <https://www.set-test.org/?utm_source=PR&utm_medium=article> பதிவு செய்து கொள்ளலாம். சிம்பியாசிஸ் இண்டர்நேஷனல் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) நொய்டா, ஐதராபாத், நாக்பூர் மற்றும் பெங்களூரு எனப் பல்வேறு மாநிலங்களிலும், நகரங்களிலும் உள்ளது. அனைத்து வளாகங்களிலும் ‘தரமான கல்வி மூலம் பன்னாட்டுப் புரிதலை மேம்படுத்துவது’ என்னும் தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கி உள்ளது. இந்தியக் கலாச்சரம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்தும் பல்வகைப் பன்னாட்டு மாணவர்களை ஈர்க்கும் உற்சாகமான சமூகங்களாகச் செயல்படுகின்றன.