கேபிட்டாலேண்ட் இந்தியா டிரஸ்ட் தனது முதல் கேப்டிவ் சோலார் மின் நிலையத்தை இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் அமைத்துள்ளது. இந்த 21 மெகாவாட் சோலார் ஆலை ஆண்டுதோறும் 30 மில்லியன் கிலோவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மற்றும் 2 மில்லியன் சதுர அடி கொண்ட அலுவலகத்திற்குத் தேவையான மின் விநியோகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும். சோலார் ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், தமிழ்நாட்டில் உள்ள சிஎல்ஐஎன்டி நிறுவனத்திற்குச் சொந்தமான பொதுவான பகுதிகளுக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும்.
இது சிஎல்ஐஎன்டி நிறுவனத்தின் பசுமை ஆற்றல் பயன்பாட்டை 70 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரிக்கும், அதன் கார்பன் உமிழ்வை 17,000 டன்களுக்கு மேல் குறைக்கும், அத்துடன் மின்சாரம் வாங்குவதற்கான அதன் தேவையையும் குறைக்கும். இந்த வசதி 8 மெகாவாட் விரிவாக்க திறனைக் கொண்டுள்ளது, இது சோலார் ஆலையின் மொத்த அளவை 29 மெகாவாட்டாகக் கொண்டுவருகிறது.
சிஎல்ஐ-ன் 2030ஆம் ஆண்டிற்கான நிலைத்தன்மை இலக்குகளை அடைவதற்காக சிஎல்ஐஎன்டி நிறுவனம் அதன் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகமுயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. குறைந்த கார்பன் வணிகத்திற்கு மாறுவதற்கான தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக, தனது கட்டிடங்கள் முழுவதும் கூரை சோலார் பேனல்களை நிறுவி நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் பசுமை ஆற்றலைப் பெற்று வருகிறது.
சிஎல்ஐஎன்டி அதன் இஎஸ்ஜி முயற்சிகளுக்காக முன்னணி உலகளாவிய நிலைத்தன்மை பெஞ்ச்மார்க்குகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் சிஎல்ஐஎன்டி பொது வெளிப்பாட்டிற்காக 'ஏ' தரச் சான்றிழைப் பெற்றுள்ளது.
கேபிட்டாலேண்ட் இந்தியா டிரஸ்ட் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான சஞ்சீவ் தாஸ்குப்தா பேசுகையில், “தமிழகத்தில் உள்ள சூரிய மின் நிலையமானது புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நாம் அதிகரித்து வருவதற்குச் சான்றாக உள்ளது. இது சிஎல்ஐஎன்டி நிறுவனத்தின் டிகார்பனைசேஷன் உத்தியின் மையமாக உள்ளது மற்றும் 2050 ஆம் ஆண்டளவில் ஸ்கோப் 1 மற்றும் 2 க்கு நிகர ஜீரோ கார்பன் உமிழ்வை அடைவதற்கான எங்களின் ஸ்பான்சர் கேபிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட்டின் உறுதிப்பாட்டிற்கு இணங்க உள்ளது” என்றார்.
சிஎல்ஐ-ன் தலைமை நிலைத்தன்மை மற்றும் நிலையான முதலீடுகள் பிரிவின் அதிகாரியான வினம்ரா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “இந்தியாவில் எங்களின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வுகளின் வளர்ச்சியானது, எங்களது 2030ஆம் ஆண்டிற்கான நிலைத்தன்மை இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் சிஎல்ஐ-ன் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை நாங்கள் சோதனை செய்து வருகிறோம், மேலும் நிலையான கட்டமைக்கப்பட்ட சூழலை உருவாக்க பல்வேறு சந்தைகளில் எங்கள் டிகார்பனைசேஷன் தீர்வுகளை மாற்றியமைப்பதில் வேகமானவர்களாக இருப்போம்” என்றார்.