₹6.61 இலட்சத்திற்கு அறிமுகமாகும் மஹிந்திரா சுப்ரோ ப்ராஃபிட் டிரக்



இந்தியாவில் சிறு வணிக வாகனங்களின் சந்தையில் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் , டீசல் மற்றும் சிஎன்ஜி டுயோ வகைகளில் கிடைக்கும் புதிய சுப்ரோ ப்ராஃபிட் டிரக் எக்செல் தொடரின் அறிமுகத்தை பெருமையுடன் அறிவிக்கிறது.  இந்த சுப்ரோ ஃப்ராபிட்  டிரக் எக்செல் சீரிஸ் டீசல் வகையின் விலை ₹6.61 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) மற்றும் சிஎன் ஜிடுயோ வேரியண்ட் ₹6.93 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் போட்டிக்குறிய  விலையை வழங்குகிறது, பிராண்டின் விற்பனையில்  ஆறு மடங்கு அதிகரிப்புக்குப் பங்களித்த சுப்ரோ  சிஎன்ஜி டுயோ-வின் வெற்றியைத் தொடர்ந்து புதிய சுப்ரோ ஃப்ராபிட்  டிரக் எக்செல் ஆனது, பல்வகை  எஞ்சின் மற்றும் எரிபொருள் விருப்பங்கள், நவீன பாணி, மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட பல்துறை தளங்களை வழங்கும் மஹிந்திராவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

இந்த சுப்ரோ ப்ராஃபிட் டிரக் எக்செல், அதன் மைலேஜ், கடினத்தன்மை, வலிமை மற்றும் பல்துறை சுமைகளை திறமையாக கையாளும் திறன் ஆகியவற்றை வலியுறுத்துகின்ற முக்கிய அம்சங்களுடன் தனித்து நிற்கிறது.  2050மிமீ வீல்பேஸ், 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுக்கு நிலைத்தன்மையை வழங்கும் ஒரு ஆன்டி-ரோல் பார் அம்சங்களைக் கொண்டுள்ளது, இந்த சுப்ரோ எக்செல் டீசல்,  23.6 கிமீ/லி இன் ஒரு எரிபொருள் செயல்திறனை பெறுகிறது, அதே சமயம் 105லி திறன் கொண்ட சுப்ரோ எக்ஸெல் சிஎன்ஜி டுயோ, ஒரு ஈர்க்கக்கூடிய 24.8 கிமீ/கிகி ஐ  வழங்குகிறது. இந்த புதிய எஸ்சிவி ஆனது, முறையே 55 என்எம் மற்றும் 60 என்எம் முறுக்குவிசை வழங்குகின்ற சக்திவாய்ந்த 19.4 கிலோ வாட் டைரக்ட் இன்ஜெக்ஷன் டீசல் எஞ்சின் மற்றும் பிஎஸ்6ஆர்டிஇ -இணக்கமான எஞ்சினான  20.01 கிலோ வாட் பாசிடிவ் இக்னிஷன்  சிஎன்ஜி இன்ஜின் ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த வாகனம் ஆர்13 டயர்களைக் கொண்டுள்ளது மற்றும் 208எம்எம் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட், ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி நளினிகாந்த் கொல்லகுண்டா கூறுகையில், “இந்த அறிமுகமானது, சப்-2-டன் பிரிவில் வணிகங்களை மேம்படுத்துவதற்கும், இந்தியாவில் கடைசி மைல் இணைப்பை மாற்றுவதற்கும் எங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்ற ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. சுப்ரோ ப்ராஃபிட் டிரக் எக்செல், அதன் விதிவிலக்கான 500 கிமீ வரம்பு சிஎன்ஜி டுயோ மாறுபாடு, லாஜிஸ்டிக்ஸ்  மற்றும் போக்குவரத்தில் விரிவான, மதிப்பு சார்ந்த தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் நோக்கத்தை வலுப்படுத்துகின்ற ஆற்றல், சிக்கனம் , பாதுகாப்பு மற்றும் சௌகரியம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது"என்று கூறினார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form