உலகளாவிய பெரியமருந்து நிறுவனங்களில் ஒன்றான லூபின் லிமிடெட் தனது புதிய அதிநவீன பிராந்திய ரெபெரென்ஸ் அளவிலானஆய்வகத்தை தமிழ்நாட்டில் சென்னையில் பாரசைவாக்கம் பகுதியில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஆய்வகம் மற்றும் அதன் சேவை கிளைகளும் சாதாரண மற்றும் அனைத்து தரமான மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான ஆய்வக பரிசோதனைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இத்துடன் தமிழ்நாட்டில் சென்னை போன்ற மற்ற பெரும் நகரங்களிலும் தங்களது சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இது என்ஏபிஎல் அங்கீகாரங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள இந்த பிராந்திய அளவிலான ரெபெரென்ஸ் ஆய்வகம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் உயர் தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்களின் குழுவை கொண்டுள்ளது. இது பல சிறப்பு சோதனைகளான மூலக்கூறு, சைட்டோஜெனிடிக்ஸ், புளோ சைட்டோமெட்ரி, மைக்கரோ பயோலாஜி, செரோலஜி, ஹேமாட்டோலஜி, இம்முனோலஜி ஆகிய சோதனைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது. சமரசமற்ற தரக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் லூபின் டியாக்னோஸ்டிக்ஸ் துல்லியமான பரிசோதனை முடிவுகளை வழங்குகிறது.
இந்த துவக்கம் குறித்து லூபின் டயக்னாஸ்டிக்ஸ் தலைமைநிர்வாக அதிகாரி ரவீந்திர குமார் கூறுகையில், “சென்னையில் எங்கள் அதிநவீன பிராந்திய அளவிலான ரெபெரென்ஸ் ஆய்வகத்தை தொடங்குவது, சாதாரண மக்களுக்கு குறைந்த விலையில் தரமான ஆய்வக சோதனைகளை வழங்குவதற்கான எங்கள் பணியின் முக்கிய தொடக்கமாகும். அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புள்ள நிபுணர்கள் குழுவுடன், சுகாதாரஅனுபவங்களை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த விரிவாக்கம், நோயாளியின் மையத்தன்மை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்ற நமது நோக்கத்திற்கான இடைவிடாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது” என்றார்.