இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதாக இண்டீட் ஆய்வில் தகவல்


இண்டீட் நடத்திய சமீபத்திய ஆய்வின் படி, இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கும் தளமாக உற்பத்தி துறை விளங்கி வருவதாகவும் அதில் கடந்த செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை சுமார் 36 விழுக்காட்டினர் வேலை வாய்ப்புகளை பெற்றிருப்பதன் மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் துறையாக உற்பத்தி துறை சிறந்து விளங்குவதாக வெளிவந்துள்ளது.   

இந்த ஆய்வு அறிக்கை, தொழில் துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதை தரவுகளோடு வெளிப்படுத்தி உள்ளது. உற்பத்தி துறையில் பணி அமர்த்துதல் என்பது ஒரு நிலையான உயர்வை சந்திக்கும் ஆய்வாக பார்க்கப்படுவதாகவும், உற்பத்தி துறையில் வேலை தேடுபவர்கள் மூன்று சதவிகிதம் குறிப்பிடத்தக்க சரிவு உள்ளது என்றும், இது இந்த துறையில் 40 விழுக்காடு திறமை பொருந்தாதவர்களுக்கு பணி வாய்ப்பு குறைவு தன்மை உள்ளது என்று சுட்டிக்காட்டி உள்ளது.  

இண்டீட் நடத்திய ஆய்வில் பணியில் ஈடுபடுபவர்கள் ஆர்வத்துடன், உற்சாகத்துடன் பணியாற்றுபவர்கள் யார் என்பது குறித்தும் ஆய்வு நடத்தியதில், சுமார் 79 விழுக்காடு பணியாளர்கள் பிடித்தம் இல்லாமலும், ஆர்வம் இல்லாமலும், பணியில் இருப்பதால் அவர்கள் பணியாளர்களுக்கு போடப்பட்ட ஒப்பந்தங்களையும், பணி வரம்புகளையும் மீறி செயல்பட்டதும் தெரிய வந்திருக்கிறது. இத்துறையில் ப்ளூகலர் தொழிலாளர்களின் குறிப்பிடத்தக்க பிரிவினருக்கு இது கூடுதல் வருமான இழப்பை குறிக்கும் என்றும், இது இந்த ஆண்டு விண்ணப்பதாரர்களின் மெல்லிய சரிபின் பங்களிப்புக்கும் காரணியாக இருக்கலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.  

இது குறித்து இண்டீட் விற்பனை பிரிவு தலைவர் சசிகுமார் குறுகையில், உற்பத்தி பிரிவு வேலைகளுக்கான தேவை இந்தியாவில் அதிகரித்து வருவது பொருளாதாரத்திற்கு சாதகமான அறிகுறி என தெரிவித்தார். இந்தியா உலகளாவிய ஏற்றுமதியின் தலைமையாக நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிப்பதால், தொழில்துறை தொடர்ந்து வளர்ச்சி அடைவதை உறுதி செய்ய திறமை வாய்ந்த பணியாளர்களை எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் கூறினார். தேவையற்ற வேலை இழப்புக்கு வழி வகுக்காமல் அதிக செயல் திறனை உறுதி செய்யும் வகையில் தொழில்நுட்பத்தை சரியாக புரிந்து கொள்ளும் திறன் வாய்ந்த திறமை மிக்க தொழிலாளர்கள் கொண்ட குழுவை மேம்படுத்துவதில் முதலீடு செய்யும் எனவும் தெரிவித்தார். மேம்பாடு மற்றும் மறுத்திறன் திட்டங்களுக்கான பரிந்துரை வேலை தேடுபவர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார். உற்பத்தி துறையை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் முயற்சி அனைத்தும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அதிக கவனத்தை வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form