பெங்களூரு டூ பாண்டிச்சேரி இடையே ‘நியூகோ’ எலக்ட்ரிக் பஸ் சேவை துவக்கம்



சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத நிலையான எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனம் ‘நியூகோ’ என்னும் பெயரில் பல்வேறு நகரங்களுக்கு இடையே எலக்ட்ரிக் பஸ் போக்குவரத்து சேவைகளை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இதன் சேவைகள் இருந்து வரும் நிலையில் புதிதாக பெங்களூர் டூ புதுச்சேரி இடையே தனது புதிய போக்குவரத்து சேவையை இந்நிறுவனம் துவக்கி உள்ளது.

இதில் உள்ள அனைத்து ஊழியர்களும் நன்கு பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள். குறிப்பிட்ட நகரங்களில் பயணிகளுக்கான ஓய்விடங்கள் விமான நிலையங்களில் உள்ளது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பயணிகளுக்கு தேவையான உதவி மற்றும் பொருட்கள் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும் இதன் பஸ்களில்  பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. நியூகோ பஸ்கள் அனைத்திலும் 25க்கும் மேற்பட்ட கடுமையான பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படுகின்றன. பாதுகாப்பில் முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளையில் பெண் பயணிகளுக்கு தனித்துவமான சிறந்த பயண அனுபவத்தையும் வழங்குகின்றன.

பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியான பயண அனுபவத்தை வழங்கும் விதமாக நியூகோ பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன. தொழில்சார்ந்த, சுற்றுலா மற்றும் தனிப்பட்ட பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு இனிமையான மற்றும் தடையற்ற பயண அனுபவத்திற்கு நியூகோ பஸ்கள் உத்தரவாதம் அளிக்கின்றன. மேலும் பயணிகளுக்கு தடையற்ற பயண அனுபவத்தை வழங்கும் வகையில்,  இந்த பஸ்கள் பெங்களூரில் அத்திபெலே, பொம்மசந்திரா, எலக்ட்ரானிக் சிட்டி, சில்க் போர்டு, மடிவாலா, டெய்ரி சர்க்கிள், நேதாஜி நகர், சாந்திநகர், மெஜஸ்டிக், யஷ்வந்த்பூர் மற்றும் நாகசந்திரா சர்க்கிள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தப்படுகின்றன. பயணிகள் தங்கள் வசதிக்கு ஏற்ப இங்கு அவர்கள் ஏறி இறங்கிக் கொள்ளலாம். இதே போல் புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையம், இந்திரா சிலை மற்றும் ஜிப்மர் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் நின்று செல்கின்றன.

புதிய பஸ் சேவை துவக்கம் குறித்து கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தேவேந்திர சாவ்லா கூறுகையில், ”புதிதாக பெங்களூர் டூ புதுச்சேரி வழித்தடத்தில் எங்களின் சேவையை நாங்கள் துவக்கி இருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் எங்கள் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  இந்த வழித்தடங்களில் எங்களின் போக்குவரத்து சேவை துவங்கி இருப்பதன் மூலம், பயணிகளின் பயண அனுபவத்தை நாங்கள் மேம்படுத்துவதோடு, பசுமையான எதிர்காலத்திற்கும் சிறந்த பங்களிப்போம் என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form