விக்ஸின் புதிய பிரச்சாரம் துவக்கம்விக்ஸ் காஃப் டிராப்ஸ் அதன் தனித்தன்மை வாய்ந்த பிரச்சாரங்களுக்காக எப்போதும் அனைவராலும் அறியப்பட்டு வருகிறது. கிரிக்கெட் ஐகான் யுவராஜ் சிங்குடன் கைகோர்த்து அதன் புதிய #விக்ஸ் கோல் இந்தியா போல்  என்ற உற்சாகமூட்டும் பாடலை  வெளியிட்டது.   உற்சாகமூட்டும் #விக்ஸ் கோல் இந்தியா போல்  என்ற  பாடல் கிரிக்கெட்டின் மீதான நமது தேசத்தின் எல்லையற்ற ஆர்வத்தைக் கொண்டாடுகிறது.  இந்த சின்னமான #விக்ஸ் கோல் இந்தியா போல் பாடலை  எல்.கே சாட்சி அண்ட் சாட்சி உடன் இணைந்து விக்ஸ் இந்தியா தயாரித்துள்ளது.

பி அண்ட் ஜி இந்தியாவின் தனிநபர் சுகாதாரப் பிரிவுத் தலைவர்  சாஹில் சேதி கூறுகையில், " இந்த கிரிக்கெட் சீசனில், விக்ஸ் காஃப் டிராப்ஸ் யுவராஜ் சிங்குடன் இணைந்து #விக்ஸ் கோல்இந்தியா போல் கீதத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. செவித்திறன் இல்லையென்றாலும் உற்சாகம் என்பது  குறைந்துவிடாது என்பதை உறுதி செய்வதற்காக இந்த கீதத்தின் உற்சாகமூட்டும் பதிப்பை இந்திய சைகை மொழியில் மற்றவர்களைப் போலவே  விளையாட்டின் மீது ஆர்வத்தை பகிர்ந்து கொள்ளும்  சுமார் 6.3 கோடி முழுமையான  செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்திற்காக உருவாக்கியுள்ளோம்.   இந்த கீதத்துடன், விக்ஸ் காஃப் டிராப்ஸ் நம் தேசம் விளையாட்டின் மீது கொண்டுள்ள ஈடுபாடு மற்றும் எவ்வாறு  பன்முகத்தன்மையில் ஒற்றுமையைக்  காண்கிறது என்பதையும் கொண்டாடுகிறது" என்றார்.

இந்த பாடலைப் பற்றி  கிரிக்கெட் ஐகான் யுவராஜ் சிங் கூறியதாவது, " #விக்ஸ் கோல் இந்தியா போல் பாடலின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  இந்திய சைகை மொழியில் பாடலைக் கற்றுக்கொள்வதையும் இசைப்பதையும் நான் ரசித்தேன்” என்றார்.

 இந்த கிரிக்கெட் சீசனில், விக்ஸ் காஃப் டிராப்ஸ்  இந்தியா  சிங்கிங் ஹேண்ஸ்சுடன் ஒண்றிணைந்துள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள காது கேளாதோருக்கான கல்வி, விழிப்புணர்வு மற்றும் அணுகலை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பு - பிரத்யேகமாகத் தொகுக்கப்பட்ட இந்திய சைகை மொழிப் பதிப்பிற்காக, குறிப்பிட்ட அந்த சமூகத்தின் ஆர்வமுள்ள ரசிகர்கள் மற்றும் யுவராஜ் அவர்களும் அதற்குத் தயாராக உள்ளனர்.

இந்தியா சைனிங் ஹேண்ட்ஸின்  நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அலோக் கெஜ்ரிவால், "இந்த கிரிக்கெட் சீசனில் காது கேளாதவர்களும் மற்றவர்களைப் போல  விளையாட்டை ரசிக்க ஏதுவாக இந்திய சைகை மொழியில் இந்த உற்சாகமூட்டும்  கீதத்தை உருவாக்க விக்ஸை அணுகியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். சமூகத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை அடையும் எங்கள் சமூக சேனல்களில் இந்த பாடல் விரைவில் வெளியிடப்படும்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form