இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க சரிவிகித உணவு, உடற்பயிற்சி அவசியம் ; இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ். சூர்யபிரகாஷ் விளக்கம்

 சமீப காலமாக உலகம் முழுவது இதயம் சார்ந்த பிரச்சினைகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பலரும் மரணம் அடைந்து வருகிறார்கள். அதிக இறப்புக்கு முக்கிய காரணியாக இதய செயலிழப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தற்போது தீவிர சுகாதார பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.  

இதுகுறித்து இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ். சூர்யபிரகாஷ் கூறுகையில், “உடலில் உள்ள மற்ற உறுப்புகளுக்கு இதயம் ரத்தத்தை சீராக வழங்காமல் பாதிக்கப்படும்போது அது இதய செயலிழப்பு என்று கூறப்படுகிறது. கூடுதலாக, ஒருவரின் தமனிகள் மிகவும் கடினமாகி, ரத்த ஓட்டத்தைத் தடுக்கும் போதும், அது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. சரிவிகித உணவு, வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்த மேலாண்மை மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்வது ஆகியவை நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்” என்றார்

அவர் மேலும் கூறுகையில், “இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க பழங்கள், காய்கறிகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முழு தானியங்கள்,  நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள் உள்ளிட்டவேற்றோடு மீன் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். இதயம் ஆரோக்கியமாகவும், வலிமையாக இருக்க மருத்துவரின் வழிகாட்டுதலின் படி வழக்கமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் புகை மற்றும் மது போன்றவற்றைக் கைவிட வேண்டும். சிறிய அளவிலான இதய பாதிப்பு உள்ளவர்கள் உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது, அது இதயத்தை மேம்படுத்தவதில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் மன அழுத்தத்தைப் போக்க யோகா, தியானம், நடைபயிற்சி மற்றும் இசை கேட்பது போன்றவை உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form