மோட்டோரோலா, இந்தியாவின் சிறந்த 5 ஜி ஸ்மார்ட்ஃபோன் பிராண்டு, மோட்டோரோலா எட்ஜ் சீரிஸில், மோட்டோரோலா எட்ஜ் 40 நியோவை அறிமுகப்படுத்தியது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ மூன்று பிரமிக்க வைக்கும் பேன்டோன் கலர் வகைகளில் கிடைக்கிறது, வேகன் லெதர் ஃபினிஷில் கனீல் பே மற்றும் சூதிங் ஸீ மற்றும் பிஎம்எம்ஏ (அக்ரிலிக் க்ளாஸ்) ஃபினிஷில் ப்ளாக் ப்யூட்டி . இந்த ஸ்மார்ட்ஃபோன் 28 செப்டம்பர் 2023, 7 மணியிலிருந்து ஃப்ளிப்கார்ட்டில், மோட்டோரோலா. இன் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் உட்பட முன்னணி சில்லறை விற்பனை கடைகளில் சேலில் இருக்கும். 8 ஜிபி +128 ஜிபி வகைக்கு அறிமுக விலையாக ரூ 23,999க்கும், பிரத்யேக பண்டிகை அறிமுக விலையாக ரூ 20,999க்கும், 12 ஜிபி +256 ஜிபி வகைக்கு அறிமுக விலை ரூ 25,999க்கும் பிரத்யேக பண்டிகை அறிமுக விலையாக ரூ 22,999க்கும் கிடைக்கிறது.
நுகர்வோர்கள் இந்த சாதனத்தை வாங்குவதற்கான பின்வரும் இரண்டு சலுகைகளிலிருந்து தேர்ந்தெடுக்கலாம், இது பொருளின் இறுதி விலையை ரூ.19,999 (8 ஜிபி+128 ஜிபி-க்கு) மற்றும் ரூ 21,999 (12 ஜிபி+256 ஜிபி-க்கு) -ல் தொடங்கச் செய்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்கில் ரூ.1000 உடனடி பேங்க் தள்ளுபடி. கூடுதலாக, நுகர்வோர்கள் முன்னணி பேங்க் கார்டுகள் மீது 6 மாதங்கள் வரை வட்டி இல்லா மாத தவணைகலையும் பெறலாம்
இந்த மோட்டோரோலா எட்ஜ் நியோ இந்த பிரிவின் முதல் ஐபி68 அண்டர்வாட்டர் ப்ரொடெக்ஷன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 1.5 மீட்டர்கள் சுத்தமான தண்ணீரில் 30 நிமிடங்கள் வரை மூழ்கியிருந்தாலும் தூசி , அழுக்கு மற்றும் மணலை எளிதாக எதிர்த்து நிற்கும். இந்த ஸ்மார்ட்ஃபோன் ஐப6 அண்டர்வாட்டர் ப்ரொட்டெக்ஷனுடன் வரும் உலகின் மிக லேசான 5ஜி ஃபோன். இது 172 கிராம், மிகவும் லேசானது மற்றும் எல்லைக்கோட்டில் முடிவில்லா முனையுடன் 7.79 மிமீ மிக மெல்லிய பாடியுடன் வருகிறது.
144 ஹெர்ட்ஸ் 6.55 இன்ச் பிஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளே, 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் மற்றும் டிசிஐ-பி3, 1300நிட்ஸ் மூலம் உச்சபட்ச பளிச்சிடும் தன்மை, மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அதன் கர்வ்டு டிஸ்பிளேயுடன் முனை விளக்குகளின் ஆர்வமளிக்கும் அம்சத்தை கொண்டு வருகிறது , இது ஒரு புதிய அறிவிப்பு, ஒரு இன்கமிங் ஃபோன் கால் மற்றும் இன்னும் அதிகமானவை பற்றி உங்களுக்கு வெவ்வேறு வழிகளில் தெரியப்படுத்துகிறது, டால்பி அட்மாஸ், இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், உலகின் முதல் மீடியா டெக் டைமென்சிட்டி 7030 மின்னல் -வேகம் கொண்ட ப்ராசசர், 6என்எம் சிப்செட், மீடியாடெக் ஹைப்பர் என்ஜின் கேம் தொழில்நுட்பம், 50 எம்பி அல்ட்ரா பிக்சல் நைட் விஷன் பரைமரி கேமரா , ஆட்டோ நைட் விஷன் தொழில் நுட்பம், ஆல்-பிக்சல் ஃபோகஸ் தொழில் நுட்பம், 13 எம்பி இரண்டாம் நிலை பின்பக்க கேமரா சிஸ்டம், மேக்ரோ விஷன், முன்பக்கத்தில், க்வாட் - பிக்செல் தொழில் நுட்பத்துடன் 32 எம்பி செல்ஃபி கேமரா, ஹாரிசான் லாக் ஸ்டெபிலைசேஷன் , வீடியோ போர்ட்ரெய்ட், ஆடியோ சூம், வ்ளாக் மோட் போன்ற பல ஃப்ளாக்ஷிப்-கிரேட் கேமரா அம்சங்களுடன் வருகிறது.
இந்த சாதனம் பாக்சில் உள்ளடங்கிய 68வாட்ஸ் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜருடன் மிகப்பெரிய 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் பொருத்தப்பட்டு வருகிறது. ஃபேமிலி ஸ்பேஸ், மோட்டோ செக்யூர் மற்றும் மை யுஎக்ஸ் போன்ற அதன் பல சாஃப்ட்வேர் சலுகைகள் உபயோகிப்பாளர்களுக்கு ஒரு உகந்தபட்ச ஸ்மார்ட்ஃபோன் அனுபவத்தை அளிக்கிறது. இந்த ஃபேமிலி ஸ்பேசஸ் அம்சம் ஆப்களை உபயோகிக்கும் நேரத்தை நிர்வகிக்க அனுமதிக்கிறது. மோட்டோ செக்யூர் உபயோகிப்பாளர்கள் நெட்வொர்க் பாதுகாப்பை நிர்வகிப்பதை, ஆப் பர்மிஷன்களைக் கட்டுப்படுத்துவதை, மற்றும் அவர்களுடைய மிக உணர்வுபூர்வமான டேட்டாவிற்கு இரகசிய ஃபோல்டரை உருவாக்கவும், ஸ்மார்ட்ஃபோனில் முக்கிய செக்யூரிட்டி மற்றும் தனிமை அம்சங்கள் அனைத்திற்கும் அதனை செல்ல வேண்டிய இடமாக ஆக்குகிறது.
இந்த மோட்டோ கனெக்ட் அண்டு ரெடி ஃபார் ஃபீச்சர் உபயோகிப்பாளர்கள் அவர்களுடைய ஸ்மார்ட்ஃபோனை வையர் இல்லாமல் டிவிக்கு இணைக்க, வீடியோ கால்கள் செய்வதற்கு மற்றும் ஸ்மார்ட் ஃபோன் ஆப்களை பெரிய ஸ்க்ரீனில் உபயோகிப்பதற்கு அனுமதிக்கிறது. இந்த சாதனம் எந்த ப்ளோட்வேரும் இல்லாமல் ஆன்ட்ராய்டில் இயங்குகையில் , மோட்டோரோலா 2 ஓஎஸ் அப்கிரேட்கள் மற்றும் 3 வருட பாதுகாப்பு அப்கிரேட்களை உறுதி செய்திருக்கிறது
மோட்டோரோலா ஏசியா பசிஃபிக் எக்சிக்யூட்டிவ் டைரக்டர் - பிரஷாந்த் மணி பேசுகையில், “ இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோவை அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் ஆர்வத்துடன் உள்ளோம், இது முன்னணி தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான எங்களுடைய அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்ஃபோன் புதிய தர நிலைகளை அமைக்கும் என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.