நிதி உலகின் சிக்கல்களை எளிமையாக்கும் ஆலிஸ்ப்ளு

 


முன்னோடி தரகு நிறுவனம் ஆலிஸ் ப்ளூ, சிக்கலான நிதிக் கருத்துக்களை அனைத்து வகையான தொழில் பின்னணியில் உள்ள வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவரும் அணுகக்கூடிய வகையில் எளிமையாக்கும் மிகச் சிறந்த பணியை மேற்கொண்டதன் மூலம் தனக்கென ஒரு முக்கிய  இடத்தைப் பிடித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் நிதி அறிவு அல்லது அனுபவத்தைக் கருத்தில் கொள்ளாமல்  வர்த்தகம் மற்றும் முதலீட்டு உலகில் பங்குபெறவும் பயனடையவும் வாய்ப்பு இருக்க வேண்டும் என்று நிறுவனம் உறுதியாக நம்புகிறது.   

இந்த நோக்கில், ஆலிஸ்ப்ளூ பாரம்பரியமாக நிதி களத்தில் நுழைய பலருக்கு தடையாக இருந்த விசயங்களை உடைக்கத் தொடங்கியுள்ளது. நிறுவனம் நிதி பற்றிய  புதிர்களை விடுவித்து  பயிற்சி மூலம் முழுமையான புரிதல் மற்றும்  நம்பிக்கை  கொண்ட புதிய தலைமுறை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களை வளர்த்து வருகிறது.

ஆன்லைன் வர்த்தக கணக்குகளுடன், தனிநபர்கள், பங்குகள், கொணர்வுகள், செலாவணிகள் மற்றும் வியாபாரப்பொருட்கள் உட்பட பல்வேறு நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கும். புதிதாக தொழில் தொடங்குபவர்கள் முதல் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் வரை அனைத்து வகையான பிரிவினருக்கும் ஆலிஸ்ப்ளூ பல்வேறு வகையான வர்த்தகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட வர்த்தக தளங்களையும், கருவிகளையும் வழங்குகிறது. 

இந்த இயங்குதளங்கள் பெரும்பாலும் யூஸர் பிரண்ட்லி மற்றும் ரியல்-டைம் மார்கெட் டேட்டா, மேம்பட்ட சார்ட்டிங் கருவிகள் மற்றும் ஆர்டர்களை செயல்படுத்தும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் கருவிகளை வழங்குகிறது.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு உலகில் நுழையும் அனைவருக்கும் நிதிப் பின்னணி இருப்பதில்லை என்பதை நிறுவனம் ஒப்புக்கொள்கிறது.  எனவேதான், அவர்கள் தங்கள் தளங்கள் மற்றும் கருவிகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலும், அனைவரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்காக பல சேனல்களை வழங்குகிறார்கள். 

இதன் உதவியுடன் வாடிக்கையாளர்கள்  தங்களுக்குத் தேவைப்படும்போது உடனடியாக உதவியாளர்களை அணுக முடியும் என்பதை அவர்கள் உறுதிசெய்கிறார்கள். ஆலிஸ்ப்ளுவின் முதலீட்டின் அடிப்படைகள் முதல் மேம்பட்ட வர்த்தக உத்திகள் வரையிலான தலைப்புகளை உள்ளடக்கிய கட்டுரைகள், வெபினார்கள், வீடியோ டுடோரியல்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. இவை அனைத்தும் நிதிச் சந்தைகளில் நம்பிக்கையுடன் செயல்படத் தேவையான பயிற்சியை அளித்து  தங்கள் வாடிக்கையாளர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.  

பிளாட்-ரேட் விலை நிர்ணய மாதிரிக்கு முன்னோடியாக இருந்து, ஆலிஸ்ப்ளூ ரைஸ்- ஐ அறிமுகப்படுத்தியது. இதில் முதலீட்டாளர்கள் 0 சதவிகிதம் கமிஷன்  வசதியுடன் நேரடி பரஸ்பர நிதிகள் மற்றும் அரசு, கார்ப்பரேட் மற்றும் தங்கப் பத்திரங்கள் மற்றும் "டெலிவரி டிரேட்களுக்கான ஜீரோ புரோக்கரேஜ்" ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.   தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய அதிநவீன வர்த்தகத் தளங்கள் மூலம், ஆலிஸ்ப்ளு  பாரம்பரியமாக வர்த்தகத்துடன் தொடர்புடைய சிக்கல்களை நீக்கியுள்ளது.

 மறைமுகமான மற்றும் விருப்ப முரண்களால் அடிக்கடி பாதிக்கப்படும் ஒரு தொழிலில்,  ஆலிஸ்ப்ளு வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறை நடைமுறைகள் மீது அது காட்டியுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக தனித்து நிற்கிறது.  வழிசெலுத்தல், சந்தைப் போக்குகளைப் புரிந்துகொள்வது அல்லது இடர் மேலாண்மை போன்ற  எந்தவொரு பணித்தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவி தேவைப்பட்டாலும் நிறுவனத்தின் ஆதரவுக் குழு அவர்களின் வர்த்தகப் பயணத்தின் ஒவ்வொரு படியிலும் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு தயார் நிலையில் இருக்கிறது.

ஆலிஸ்ப்ளுவின் நிறுவனர் மற்றும் சி.இ.ஒ. திரு. சித்தவேலாயுதம் மோகனமூர்த்தி கூறுகையில், “ஆலிஸ்ப்ளுவில், நிதியை அனைவருக்கும் கிடைக்கச்செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.  எங்கள் அணுகுமுறை நிதி உலகில் உள்ள  சிக்கல்களை நீக்கி அதை  எளிமையான, புரிந்துகொள்ளக்கூடிய கருத்துகளாக மாற்றுவது ஆகும். அணுகல் மற்றும் புரிதல் ஆகிய இரண்டும் ஒருங்கே அமைந்த நிதியியல் களத்தை உருவாக்குவதும்,  அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய நிதி எதிர்காலத்திற்கு வழி வகுப்பதுமே எங்களது குறிக்கோள்” என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form