இந்திய நுகர்வோர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் எளிமைப்படுத்தவும் மேம்பட்ட தரத்துடனான சுவிட்ச்களை ஆல்ஸி என்ற பெயரில் லெக்ராண்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
எளிமைப்படுத்தப்பட்ட சுவிட்ச் தயாரிப்பு வரிசையை வழங்குவதன் மூலம் இந்தியாவின் பல்பணியாக்க நிபுணர்களின் வாழ்க்கையை எளிமையாக்கி பெரும்பான்மைப் பிரிவின் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஆல்ஸி வடிவமைக்கப்பட்டுள்ளது, எடுத்துக்காட்டாக, இருந்த இடத்திலிருந்து ஒரு அங்குலம் கூட நகர வேண்டிய தேவையில்லாமல் நான்கு விளக்குகள் மற்றும் ஒரு மின்விசிறியை கட்டுப்படுத்த இதன் ரிமோட்-கண்ட்ரோல் யூனிட் பயனர்களுக்கு உதவுகிறது. இந்த வசதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நான்கு சுவிட்சுகள் மற்றும் ஒரு ஃபேன் ரெகுலேட்டரை வழங்க இந்த சிறப்பு அம்சம் உறுதியளிக்கிறது.
பாரம்பரிய சுவிட்ச் இயக்கங்களில் வழக்கமாக வெளிப்படும் கிளிக் ஒலியை அறவே இல்லாமல் செய்யும் வகையில் ஆல்ஸியின் அல்ட்ரா-சாஃப்ட்-டச் ராக்கர்ஸ் ஒரு இரைச்சலற்ற அமைதியான சூழல் நிலவும் அனுபவத்தை வழங்குகிறது. நீடித்த செயல்திறன் மிக்க உழைப்பை உறுதி செய்யும் வகையில் . 1 லட்சம் இயக்கச் செயல்பாடுகளுக்கு உட்படுத்தி சோதிக்கப்பட்டது, ஆல்ஸி தயாரிப்பு வரிசையிலுள்ள குறைந்த ஒலியுடனான ஒவ்வொரு சுவிட்சும் ஆர்ஓஎச்எஸ் சான்றளிக்கப்பட்டது. மின் விசிறி ரெகுலேட்டர்களில் உள்ள ஐஎஸ்ஐ முத்திரைகள் அதன் பாதுகாப்புக்கு உத்திரவாதமளிக்கும் அதே சமயம் பிஐஎஸ் வழங்கிய சிஆர்எஸ் சான்றிதழுடன் அதன் யுஎஸ்பி சார்ஜிங் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. அந்த முறைப்படி மின் அதிர்ச்சியை தடுக்கும் வகையில் இதன் சாக்கெட்டுகள், பாதுகாப்பு ஷட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன, என்று நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் மேலாண்மை இயக்குனருமான டோனி பெர்லாண்ட் தெரிவித்துள்ளார்.