தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான இந்திய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆராய்ச்சி சங்கம் தனது 65வது நிறுவன தினத்தை செப்டம்பர் 21 முதல் 23 வரை சென்னை வர்த்தக மையத்தில் கொண்டாடியது. முதல் நாள் எக்ஸ்போவை எம்ஆர்எஃப் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் மம்மன் தொடங்கி வைத்தார். ஐஆர்எம்ஆர்ஏ தலைவர் டாக்டர் ஆர்.முகோபாத்யாயா, பிரமுகர்களை வரவேற்றார். ரூப்கோ- தலைவர், காரே ராஜன் பிரதம விருந்தினர் மற்றும் அனைத்து பங்கேற்பாளர்கள் ஆகியோரை வரவேற்றார். எக்ஸ்போ இயக்குனர் டாக்டர். கே. ராஜ்குமார் மாநாட்டை பற்றி சுருக்கமான விவரத்தை வழங்கினார்.
2வது நாள் ரப்பர் மாநாட்டை பிரதம விருந்தினர் இந்திய அரசு டிபிஐஐடி இணைச் செயலாளர் சஞ்சீவ் தொடங்கி வைத்தார். ஷீலா தாமஸ் மற்றும் ஜே.கே டயர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் எம்.டி அன்ஷுமன் சிங்கானியா கெளரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கல்வி ஆலோசகர் மற்றும் ஆசிரியர் டாக்டர் உத்கர்ஷ் மஜும்தார் மாநாட்டின் முக்கிய உரையை நிகழ்த்தினார். தலைவர் மற்றும் இயக்குனர் ஆகியோர் நாட்டில் ரப்பர் மற்றும் அதை சார்ந்த தொழில்களின் முன்னேற்றத்திற்கு ஐஆர்எம்ஆர்ஏ - ன் பங்களிப்பை விளக்கினர்.
3வது நாளில் ரப்பர் வாரியத் தலைவர் டாக்டர் சவர் தனானியா பிரதம விருந்தினராகவும், கெளரவ விருந்தினர்களாக கனடா ரயர்சன் பல்கலைக்கழக பேராசிரியர் ரவி ரவீந்திரன் மற்றும் கொமடோர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைத்து முக்கிய பிரமுகர்களும் ரப்பர் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் தொடர்பான அனுபவங்களை தங்களின் தொழில்நுட்ப மேம்படுத்தல்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்திய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆராய்ச்சி சங்கம் ரப்பர் மற்றும் அதன் சார்ந்த தயாரிப்புகள் துறையில் அபரிமிதமான அறிவையும் தரவு பகிர்வையும் வழங்கியது.
மாநாட்டின் போது மொத்தம் 42 பேச்சாளர்கள் தங்கள் கட்டுரைகளை பல்வேறு தலைப்புகளில் சமர்ப்பித்தனர் மற்றும் 15 சுவரொட்டிகள் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் சமூகத்தால் காட்சிப்படுத்தப்பட்டன. டயர், இன்ஜினியரிங் மற்றும் பிற நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட எக்ஸ்போ ஸ்டால்களை அனைத்து பிரமுகர்களும் பாராட்டினர். 500 கல்வி மாணவர்களைத் தவிர சுமார் 1000 தொழில்துறை சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்றனர் என இந்திய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆராய்ச்சி சங்கம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.