ரே-பேன் ரிவர்ஸ் கலெக்‌ஷன் அறிமுகம்



ரே-பேன்   புத்தம் புது லென்ஸுடன் கூடிய முழுவதும் ரிவர்ஸ் செய்யப்பட்ட நான்கு யூனிசெக்ஸ் சன்க்ளாஸ் ஸ்டைலில் புரட்சிகாமான ரிவர்ஸ் கலெக்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சாரப் படத்தில் நடிக்கும் புகழ் பெற்ற பிரபல சூப்பர் மாடல் விட்டோரியா செரிட்டியாஸ்,  ரிவர்ஸ் ஐவேர் அணிந்து கொண்டு ஹை ஃபேஷன் காணொலி மூலம் காட்சிப்படுத்துகிறார். இந்த புதிய கலெக்‌ஷன் முன்னணி கண்ணாடிக் கடைகள், சன்க்ளாஸ் ஹட் மற்றும் ஆன்லைன் rayban.com/India <https://india.ray-ban.com/> தளத்தில் கிடைக்கும். இதன் விலை ரூ 11,090/- முதல் தொடங்குகிறது.

ஆஸ்டிக்மேடிக், ப்ரிஸ்மேடிக் மற்றும் தீர்க்கும் ஆற்றல் உள்ளிட்ட அதி நவீன தொழில்நுட்பத்துடன், துல்லியத்தை இழக்காமல், வழக்கமான குவி ஆடியிலிருந்து குழி ஆடிக்கு லென்ஸ் வடிவமைப்பை மாற்றுவதே இதன் சிறப்பாகும்.  கண் கூசாத் தன்மை உள்ளிட்ட உயர் செயல்திறன் கொண்ட நவீன பேண்டோஸ்கோபிக் லென்ஸ், கண் உணர்திறன் கொண்ட அலை நீளங்களில் 70 சதவிகிதம் கூசும் பிரதிபலிப்புகளைக் குறைக்கும்.  நான்கு ஐகானிக் ஷில்லோட்கள் ஊஞ்சல் பலகையாகச் செயல்பட்டு, புதிய பரிசோதனை மூலம் உன்னதமான வடிவமைப்பின் பொருளைத் தலைகீழாக மாற்றும்.

பணிச்சூழலியல் உலகளாவிய ஃரேம் தொழில்நுட்பத்தில் உருவான ரே-பேன் ரிவர்ஸ் ஏவியேட்டர், வேஃபேரர், காரவான் மற்றும் பாய் ஃப்ரெண்ட் ஆகியவை அதன் போனெட்டின் வளைவுகளை வருடியவாறே அழகு வடிவத்துக்கு எழில் சேர்க்கும். நமது கோளத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 41 சதவிகித உயிரி அடிப்படையிலான கார்பன் நைலான் லென்ஸ்கள், 67 சதவிகித உயிரி அடிப்படையிலான கார்பன் அசிடேட் ஃப்ரேம்கள், 100 சதவிகித மறுசுழற்சி பேக்கேஜிங்க், கார்ட் அண்ட் க்ளென்சிங்க் துணி போன்ற மாற்றுப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  

இது குறித்து எஸ்ஸிலர் லக்ஸாட்டிக்கா, ஆர் அண்ட் டி புராடக்ட் ஸ்டைல் லைசன்சிங்க் இயக்குனர், ஃபெடரிக்கோ பஃபா கூறுகையில் ‘எங்களது ரே-பேன் ரிவர்ஸ் கலெக்ஷன் ஐவேர் துறையில் உண்மையிலேயே மகத்தான புரட்சியாகும். லென்ஸ் வடிவமைப்பில், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய குழியாடி அழகியலும், பெரிய தரவு பகுப்பாய்வும், பயன்படுத்தப்பட்டுள்ளன.  வாடிக்கையாளர்கள் தேவையைக் கருத்தில் கொண்டு ஐகேர் மற்றும் ஐவேர் ஆகியவற்றில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்’ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form