பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் தனிநபர்கள் தங்கள் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவை அடைய அவர்களுக்கு உதவ வேண்டுமெற்ற அதன் நீண்ட கால இலக்குக்கு ஏற்ப 12 புதிய கிளைகளை பிரத்தியேகமாக திறந்துள்ளது. இந்த கிளைகளில் ரோஷ்னி - எனும் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வீட்டுக்கடனை வழங்குகிறது. தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் இக்கிளையை திறந்துள்ளது. ரோஷ்னியுடன், நிறுவனம் குறிப்பாக 1, 2 மற்றும் 3ஆம் அடுக்கு நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் கட்டுபடியாக் கூடிய வகையில் வீட்டுக் கடன்களை வழங்கும்.
இந்தத் திட்டம், வீட்டுமனை வாங்குதல், சுய கட்டுமானம், வீடு விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல், ப்ளாட் வாங்குதல், ப்ளாட் கட்டுமானம் மற்றும் சொத்து மீதான கடன்கள் உட்பட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல்வேறு வகையான கடன்களை உள்ளடக்கியது. எனவே, விண்ணப்பதாரர்கள் முதல் முறையாக கடன் வாங்குபவர்களாக இருந்தாலும், முறையான வருமானம் இல்லாமல் சுயதொழில் செய்பவர்களாக இருந்தாலும், ரூ.10,000க்கு குறைவான குடும்ப வருமானம் உள்ள நடுத்தர வருவாய் பிரிவினராக இருந்தாலும் இந்த திட்டத்தின் மூலம் கடன் பெறலாம் என பிஎன்பி எச்எஃப்சி செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.