25வது தென் மண்டல சீனியர் தேசிய டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் துவக்கம்


தென் மண்டல சீனியர் தேசிய டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் 2023-2024ம் ஆண்டுக்கான போட்டி திருத்தங்கலில் உள்ள ஹட்சன் டென்னிகாய்ட் அகாடமியில் உள்ள சிவநேச பாண்டியன் டென்னிகாய்ட் அரங்கில் நடைபெற்றது. ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட் தலைவர் ஆர்.ஜி சந்திரமோகன் முன்னிலையில் வி.வி.வி அண்ட் சன்ஸ் எடிபிள் ஆயில் லிமிடெட் இயக்குநர் எம்.ராஜீவ் விக்னேஷ் இந்த நிகழ்வை துவக்கி வைத்தார். 

இவர்களுடன் டிகேஎப்ஐ, பொதுச் செயலாளர்,ஏ.யாதையா, டிகேஎஃப்ஐ, துணைத் தலைவர், வி.சௌபாக்யா வரதராஜன், டிகேஎஃப்ஐ, பொருளாளர், எச்.எஸ்.ஸ்ரீகாந்த், டிகேஎஃப்ஐ, அமைப்புச் செயலாளர், எம்.ஆர்.தினேஷ் குமார், தமிழ்நாடு டென்னிகாய்ட் சங்கம், ஒருங்கிணைப்பாளர், டி.சங்கர், டிகேஎஃப்ஐ, நடுவர்கள் குழு ஒருங்கிணைப்பாளர், கே.ஆர்.வி.ஷ்யாம் சுந்தர், டிகேஎஃப்ஐ பயிற்சி குழுவின் தலைவர் பி. முரளி மற்றும் ஹாட்சன் பேட்மிண்டன் மைய தலைமை வழிகாட்டி அஜித் ஹரிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியை தமிழ்நாடு டென்னிகாய்ட் சங்கம் நடத்துகிறது மற்றும் அருண் ஐஸ்கிரீம் நிதியுதவி செய்கிறது.  இப்போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 72 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியின் போது, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் முதல் 6 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளில் விளையாடுவார்கள். முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பெறும் வீரர்கள் ஒற்றையர் அணி சாம்பியன் போட்டியிலும், 3 மற்றும் 4 வது இடத்தைப் பெறும் வீரர்கள் இரட்டையர் அணி சாம்பியன் போட்டியிலும், 5 மற்றும் 6 வது இடத்தைப் பெறும் வீரர்கள் மிக்ஸ் டீம் சாம்பியன் போட்டியில் பங்குபெற்று விளையாடுவார்கள்.

ஹட்சன் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைமை ஆலோசகர் அஜித் ஹரிதாஸ் பங்கேற்பாளர்களை வரவேற்று பேசினார். அப்போது, "சிறப்பான மையமாக விளங்கும் நாங்கள் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தவும், மேலும் பல வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவும் விரும்புகிறோம்" என்றார்.

இந்த நிகழ்வைப் பற்றி கருத்து தெரிவித்த ஹட்சன் அக்ரோ புராடெக்ட்ஸ் லிமிடெட்-ன் தலைவர் த ஆர்.ஜி. சந்திரமோகன், “25வது தென் மண்டல மூத்த தேசிய டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆறு தென்னிந்திய மாநிலங்களில் இருந்து வரும் விளையாட்டு வீரர்களை நாங்கள் வரவேற்கிறோம். டென்னிகாய்ட் விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களின் ஒவ்வொரு தேவை மற்றும் நம்பிக்கையையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த வசதி மிக கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் தொடக்க விழாவில் பேசிய விவிவி அண்ட் சன்ஸ் எடிபிள் ஆயில் லிமிடெட்டின் இயக்குநர் எம்.ராஜீவ் விக்னேஷ், “இந்தப் போட்டியை துவக்கி வைப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்கவும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் ஒரு பகுதியாகவும் இருந்து நாட்டிற்கு விருதுகளை கொண்டு வர வேண்டும் என வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form