ஓலா எலக்ட்ரிக்கின் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் துவக்கம்



இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக்  மற்ற நகரங்களுடன், தஞ்சாவூரில்  தனது முதல் ஓலா எக்ஸ்பீரியன்ஸ் சென்டரைத் (இசி) தொடங்குவதாக அறிவித்துள்ளது. நாடு  முழுவதும் அதன் நேரடி-நுகர்வோர் இருப்பை அதிகரிக்க அதன் விரிவாக்க உத்தியின் ஒரு பகுதியாக புதிதாக தொடங்கப்பட்ட  ஓலா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் தஞ்சாவூரில் மெடிக்கல் காலேஜ் சாலையில்  அமைந்துள்ள ரஹ்மான் நகரில் அமைந்துள்ளது. 

வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் விரிவான சேவைகளை வழங்குவதற்காக இந்த ஓலா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களை சோதனை ஓட்டம் செய்ய வாடிக்கையாளர்களுக்கு இந்த மையங்கள் அனுமதிப்பதோடு, வாகனம் வாங்கும் செயல்முறை முழுவதும் நிபுணர்களின் வழிகாட்டுதலையும் வழங்குகின்றன.

 ஓலா செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனம் வாங்கும் செயல்பாட்டை முடிப்பதற்கு முன்பாக, கடன் உதவி பெறும் வாய்ப்புகள் பற்றிய விரிவான தகவலையும் பெறலாம். அத்துடன், இம்மையங்கள் ஓலா ஸ்கூட்டர்களின் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள், மற்றும் பராமரிப்பிற்கான ஒரே இடமாக இயங்குகின்றன. 2,50,000 வாடிக்கையாளர்களைக் கொண்ட ஓலா நிறுவனம், அதனைப் பயன்படுத்துவோரது சமூகத்திலிருந்து வெறும் 20 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளதால் அவர்களின் அனைத்து விதமான  விருப்ப சேவைகள், மற்றும் தேவைகளுக்கான எளிதாக அணுகலை வழங்குகிறது.

ஓலா நிறுவனம் சமீபத்தில், பல்வேறு விதமான தேவைகளுக்கும் ஏற்ற அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக விரிவுபடுத்தியுள்ளது. இப்போது இதில் மொத்தம் ஆறு மாடல்கள் கிடைக்கின்றன. ஓலா எஸ்1 வரம்பில் உள்ள ஒவ்வொரு ரகத்திலும் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இணையற்ற செயல்திறனுடன் சேர்ந்து நேர்த்தியான, மற்றும் மினிமலிஸ்ட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்களின் மகத்தான வெற்றியானது ஓலா நிறுவனத்தை ஒரு முன்னணி மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளராக ஆக்கியுள்ளது. மின்சார வாகன சந்தைப் பங்கில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் இந்நிறுவனத்திற்கு  உள்ளன.

ஓலா இந்தியாவில் அதன் புறநிலைத் தொடுப்புள்ளிகளை விரிவுபடுத்த குறிப்பிடத்தக்க முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது. கூடுதலாக  இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களுடன்,  நிறுவனமானது வரும் நாட்களில் 500 டச் பாயின்ட்களை எட்டும் பாதையில் முன்னேறி வருகிறது. மேலும், ஓலா எலக்ட்ரிக் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 1,000 டச் பாயின்ட்களை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதுடன் அதை அடைவதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறது என ஓலா செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form