பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பு வழங்கிய 23 பேருக்கு டெட்கோ விருதுதமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டெட்கோ) அமைப்பின் முதலாம் ஆண்டு விழா மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கான விருது விழா மதுரை சிக்கந்தர்சாவடி ஏஎப்டிசி வளாகத்தில் நடைபெற்றது. டெட்கோ அவார்ட் 2023 என்ற பெயரில் நடந்த இந்த விழாவுக்கு டெட்கோ தலைவர் ஜே.கே.முத்து தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கி.ராஜமூர்த்தி, பொருளாலர் டி.வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பேராசியரும், நடிகருமான கலைமாமணி கு.ஞானசம்பந்தன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.


விழாவில் விருது பெற்றவர்கள் விபரம் வருமாறு:

· Best Women Startup of the year - Ms. SOWMIYA VIJAYAKUMAR, Dindigul.

· Best Digital Enabler - IPPO PAY, Ramanathapuram.

· Best MultiGen Enterprise - M/s. SVS FOODS, Madurai.

· Best Cluster of the year - M/s. PARAMAKUDI ENGG CLUSTER, Paramakudi.

· Best Women Entrepreneur of the year - Ms. ABIRAMI, M/s. Seyon Biotech, Thanjavur.

· Best Women SHG of the year - M/s. PENSAKTHI SHG, Karumathur, Madurai.

· Best FPO of the year - M/s. SARABANGA FPO, Salem.

· Best Organic Farmer of the year - Mr. S. TAMILSELVAN, Oddanchathiram.

· Best Agri Startup of the year - Mr. ARUNESWAR MGB, Grow Your Farms Pvt Ltd, Ariyalur.

· Best Videopreneur - Mr. J. PRAGADEESH, THENEER IDAIVELAI, YouTube Channel.

· Best Tech Startup of the year - M/s. SAVEMOM, Madurai.

· Best Institution - Ms. S.Sanashree, M/s. SANASHREE INSTITUTE, Madurai.

· Best Incubator of the year - M/s. MABIF, Madurai.

· Best Social Startup of the year - Mr. RAKESH MS, M/s. 9 GEMS AGRO FUELS, Sivagangai.

· Best Startup Forum of the year - M/s. STARTUP PATHIYAM, Madurai.

· Best Innovator of the year - Mr. MUKESH KANNA, Salem.

· Best Angel Investor of the year - Mr. MADHU VASUDEVAN, Karur.

· Best Mentor - Mr. K. LAKSHMANAN, Chennai.

· Best SeaFood Startup - R. Kalai Kathiravan, M/s. LEMURIAN VENTURES, Ramanathapuram.

· Best Exporter of the year - Mr. Vijay Anand, M/s. VASHINI EXPORTS, Coimbatore.

· Best Healthcare Provider - Dr. S. Sanath Kumar, M/s. DR. MADHAVAN'S HEART CENTER, Madurai.

· Lifetime Achiever - Mr. S. RETHINAVELU, Madurai

விழா குறித்து டெட்கோ அமைப்பின் தலைவர் ஜே.கே.முத்து கூறுகையில், சிறந்த செயல்பாடுகளுடன் அசெள்கரியத்தை அல்லது பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் துவக்கி, நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, இலக்கை நோக்கி வேகமாக வளரும் தனி நபர்கள், குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பு வழங்கியவர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று விருது வழங்கி பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பு வழங்கியவர்களை ஊக்குவிக்க இருக்கிறோம். மேலும்  டெட்கோ அமைப்பிற்கு உறுப்பினர் சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது. அமைப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் 082204 49911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form