பிஏஎஸ்எஃப் பெசட் மற்றும் டுவிலான், நெல் மற்றும் தேயிலை சாகுபடி விவசாயிகள் பிரச்சனையான களைகளை கட்டுப்படுத்தி அவர்கள் பயிர்களைப் பாதுகாக்க பெருமளவில் உதவி புரியும் இரண்டு புதிய களைக்கொல்லிகளை அறிமுகம் செய்துள்ளது. பெசட் தயாரிப்பு நெல் வயல்களில் பயன்படுத்த ஏற்ற வகையிலும், டுவிலான் தயாரிப்பு தேயிலை தோட்டங்களில் பயன்படுத்த ஏற்ற வகையிலும் உருவாக்கப் பட்டுள்ளன. இந்த புத்தம் புதிய தயாரிப்புகள் இந்திய விவசாயிகளுக்குப் பிரச்சனை கொடுக்கும் களைகளை சிறந்த முறையில் கட்டுப்படுத்தி நம்பகமான முறையில் களை மேலாண்மை செய்ய உதவும்.
நெல் வயல்களில் முக்கிய களைத் தாவரமாக வளர்ந்து கொண்டிருக்கும் குதிரைவாலி வகை புற்களை பெசட் சிறப்பாக நம்பகமான வழிமுறைகளில் கட்டுப்படுத்தும். இந்த முன்னோடியான தீர்வில் பிஏஎஸ்எஃப்-ன் குவின்குளோராக் சிறப்பு வீரிய மூலப்பொருளாகச் சேர்க்கப்பட்டுள்ளது. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இது ஒரு திறமையான டேங்க் கலவையாகப் பயன்பட்டு நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு நெல் வயல்களில் களைகளை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்த உதவும் என்பதும், இந்த மருந்தைத் தேவைப்படும் காலங்களில் பயன்படுத்தலாம் என்பதும் இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும்.
கிக்ஸர் செயல்பாட்டு ஆற்றல் உள்ள டுவிலான் புத்தம் புதிய தீர்வு தேயிலைத் தோட்டங்களில் காணப்படும் களைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்த உதவும். வழக்கமான களைக்கொல்லிகள் தெளிப்புகளுக்கு ஏதிர்ப்பு சக்தியுடன் தாங்கி நிற்கும் பிடிவாதமான களைகள் உட்பட்ட பல வகை அகன்ற இலைக் களைகள் தொல்லைகளைக் கட்டுப்படுத்த இத் தயாரிப்பு உதவும். தேயிலைத் தோட்டங்களில் களைகள் முளைத்து வளரும் கட்டத்தில் இந்த மருந்தை நேரடியாகத் தெளித்து கட்டுப்படுத்திவிட முடியும். தேயிலைத் தோட்டங்களில் பயன்படுவதுடன் இத் தயாரிப்பை பயிர் அல்லாத வகை நிலங்களிலும் பயன்படுத்தி அகன்ற இலைக்களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
"நெல் சாகுபடி விவசாயிகளுக்காக பெசட் மற்றும் தேயிலை தோட்டத்தில் பயன்படுத்த டுவிலான் எனும் இரண்டு தயாரிப்புகளை இந்திய விவசாயிகளுக்கு வழங்குவதில் நாங்கள் உண்மையில் பெருமை படுகிறோம். இந்திய விவசாயத்தின் வளம் குன்றா வளர்ச்சி மற்றும் புதுமைப் படைப்பில் பிஏஎஸ்எஃப்-ன் ஈடுபாட்டின் சாட்சியமாக இந்த இரண்டு புதுமைப் படைப்புகளை அறிமுகம் செய்வதில் நிறுவனம் பெருமை கொள்கிறது. நீடித்து நிலைத்து பலனளிக்கும் தீர்வுகளை விவசாயிகளுக்கு வழங்கி, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் உணவுத் தேவைகளுக்கு விளை பொருள்களை உற்பத்தி செய்யவும், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதிலும் நாங்கள் உதவ முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் பலப்பட்டுள்ளது" என்று தெற்காசியா, விவசாயத் தீர்வுகள், வர்த்தக இயக்குனர் ராஜேந்திர வேலகல தெரிவித்தார்.