மதுரை எஸ்இவி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் டாடா ஐபிஎல் ஃபேன் பார்க்



அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கிரிக்கெட் போட்டி 31-03-2023, வெள்ளிக்கிழமை மாலை தொடங்குகியது. போட்டிகளைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். வீட்டில் டி.வி.யில் கண்டுகளிக்கும் அனுபவத்தை விட ஸ்டேடியத்தில் கிரிக்கெட்டை பார்த்து ரசித்து ஆரவாரம் செய்வது ரசிகர்களுக்குப் ரொம்பவே பிடிக்கும். ஆனால் எல்லோராலும் கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்த்து ரசிக்க முடியாது.

அப்படி நேரில் கண்டுகளிக்க ஆசைப்படும் ரசிகர்களுக்காகவே மதுரை ரகரில் ஐபில் ஃபேன் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை நகரில் அமைந்துள்ள எஸ்இவி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பிரத்தியேகமாக ஐபிஎல் போட்டிகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டாடா ஐபிஎல் ஒருபோதும் இல்லாத விதத்தில் பெரிதாக, வெறித்தனமாக மற்றும் ஆவலோடு ரசிக்கும் விதத்தில் பிரமாண்டமாக திரையிடப்படுகிறது. ரசிகர்கள் இலவசமாக இந்த போட்டிகளை கண்டுகளிக்கலாம். மார்ச் 31ம்தேதி மாலை 4.30 மணி முதல் ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல ஏப்ரல் 1ம் தேதி பிற்பகல் 1.30 மணி முதல் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

நாடு முழுவதும் 45 நகரங்களில் இதுபோன்ற பிரத்தியேக மைதானங்களில் கிரிக்கெட்டை ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரம்மாண்ட திரைகளில் காட்டப்படும் கிரிக்கெட் நேரடி காட்சிகள், ஒவ்வொரு திகைப்பூட்டும் தருணத்திலும், ஒவ்வொரு விளையாட்டு பகுதியும் ரசிகர்களுக்கு ஸ்டேடியம் போன்ற உணர்வை வழங்கும். அனுமதி முற்றிலும் இலவசம். அதோடு, இசை, உணவுக்கடைகள், பானங்கள், ஷாப்பிங்கிற்கு கடைகள் மற்றும் சில குதூகலமான செயல்பாடுகள் உள்ளிட்டவையும் மைதானத்தில் இருக்கும். நாடு முழுவதும் உள்ள ஐபிஎல் ஃபேன் பார்க்குகளில் இந்த முறை 5 லட்சத்திற்கும் அதிகமான கிரிக்கெட் பிரியர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

Post a Comment

Previous Post Next Post

Contact Form