குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் மில்லட் ஹார்லிக்ஸ் அறிமுகம்இந்தியாவின் மிக வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஹார்லிக்ஸின் புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹார்லிக்ஸ் போர்ட்ஃபோலியோவில் ஒரு புதிய வரவாக சாக்லேட் சுவையில் இந்த மில்லட் (தினை) ஹார்லிக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதன்முதலில் இது தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மில்லட் ஹார்லிக்ஸின் அறிமுகம், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்கள், யூடியூப், ஒடிடி தளங்கள் மற்றும் பத்திரிகைகள் போன்றவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.

புத்தம் புதிய மில்லட் ஹார்லிக்ஸ் பேக்குகள் சாக்லேட் சுவையில், மூன்று எஸ்கேயு-வில் கிடைக்கிறது 400 கிராம் ஜார் ரூ.279/-க்கும், 400 கிராம் பவுச் ரூ. 239/-க்கும், 600 கிராம் அட்டைப்பெட்டி பேக் விலை ரூ.399/-க்கும் தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகளில் கிடைக்கின்றன.

ஊட்டச்சத்து வணிகத்தின் மூலம் ஒரு பில்லியன் நபர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்க வேண்டும் என்கிற எச்யுஎல் நிறுவனத்தின் இலக்கில், மில்லட்ஸ் (தினை) ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் இலட்சிய பயணத்தில் உள்ள சவால்களில் ஒன்று, பாரம்பரிய இந்திய தானியங்களுக்கு பழகிக்கொள்வதை எளிதாக்குவதேயாகும். 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் விரும்பும் சுவைகள் மற்றும் அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை மையமாகக் கொண்டு இந்த மில்லட் ஹார்லிக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சாக்லேட் சுவையில் வரும் மில்லட் ஹார்லிக்ஸ், தினைகள் என்கிற சூப்பர் தானியங்களுடன் வரும் எச்யுஎல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும் - ஃபிங்கர் மில்லட் (கேழ்வரகு), சோளம் (ஜோவர்), ஃபாக்ஸ்டெயில் மில்லட் (கங்கானி) மற்றும் முத்து தினை (பஜ்ரா) போன்ற பல தினைகளைக் கொண்டு இது தயாரிக்கப்படுகிறது. கால்சியம், இரும்பு, புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் இயற்கையான மூலமாக இந்தபல வகை தினைகள் உள்ளன.

எச்யுஎல் நிறுவனத்தின் நியூட்ரிஷன் பிரிவின், வைஸ் பிரசிடென்ட் மற்றும் பிஸ்னஸ் ஹெட்,  கிருஷ்ணன் சுந்தரம் இந்த அறிமுகம் குறித்து பேசுகையில், “ஹெல்த் ஃபுட் டிரிங்ஸ் பிரிவில் குழந்தைகளுக்காக சத்துமிக்க பல தினைகளைக் கொண்ட  சாக்லேட் சுவையில் மில்லட் ஹார்லிக்ஸை நாங்கள் அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.  இந்தியாவை சூப்பர் தானியங்களின் உலக முன்னோடியாக மாற்றுவதற்கான இந்திய அரசின் முயற்சியை ஆதரிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். சாக்லேட் சுவையில் மில்லட் ஹார்லிக்ஸ்-ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம், யுனிலீவரின் ‘எதிர்கால உணவுகள்’ குறித்த உறுதிப்பாட்டை கடைபிடித்து அதன் வரிசையில் ஒரு தயாரிப்பை வழங்கி, அந்த இலக்கை நோக்கி நாங்கள் நெருங்கி வந்துள்ளோம்.  தினைகளை குழந்தைகளுக்கான பிரதான உணவாக சேர்க்கும் முயற்சியில், இது ஒரு முக்கியமான படிநிலையாகும்” என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form