மதுரையில் 10,000 சதுர அடி பரப்பளவில் கோட்ஸ் நிறுவனத்தின் ஆலை திறப்பு

 


நூல் தயாரிப்பில் உலகளவில் முன்னணி வகிப்பதுடன் ஆடைகள் மற்றும் காலணிகளுக்கான அமைப்பு ரீதியிலான கூறுகள் உற்பத்தியிலும் பிரபலமான கோட்ஸ் நிறுவனம் அதன் நிலைப்புத்தன்மைக்கான பொறுப்புறுதியை தீவிரமாக செயல்படும் விதத்தில் இந்தியாவின் மதுரை மாநகரில் நூற்பு மற்றும் முறுக்கேற்றுதலுக்கான ஒரு முன்னோடி ஆலையை உள்ளடக்கிய நிலைப்புத்தன்மைக்கான ஒரு நவீன மையத்தை அதிகாரபூர்வமாக திறந்து வைத்திருக்கிறது.  

மதுரையில் கோட்ஸ் நிறுவனத்தின் தொன்மையான பாரம்பரியம் கொண்ட ஆலை வளாகத்தில் 10,000 சதுர அடி பரப்பளவு பகுதியில் அமைந்திருக்கிறது. பல்வேறு இழைகள், கலவைகள் மற்றும் நைலான் இழைகள் போன்ற உயர்செயல்திறன் மிக்க நூலிழைகளை பதப்படுத்தி செயல்முறைக்கு உட்படுத்துவதற்கான மிக நவீன உட்கட்டமைப்பு வசதியை கொண்டிருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகள் காலஅளவில் ஆற்றல், உள்ளீட்டுப் பொருட்கள், நீர், கழிவு மற்றும் பணியாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் கோட்ஸ் நிறுவனம் வலுவான முன்னேற்றத்தைப் பதிவுசெய்திருக்கிறது. இதே பிரிவுகளில் 2026ஆம் ஆண்டுக்குள் அடைவதற்கான புதிய இலக்குகளையும் கோட்ஸ் இப்போது அறிவித்திருக்கிறது.

 இந்நிறுவனத்தின் 2030ஆம் ஆண்டுக்கான பொறுப்புறுதி இலக்குகளை அடைவதை நோக்கிய தெளிவான கண்ணோட்டங்களை இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இலக்குகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அனைத்திலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் உமிழ்வுகள் குறைப்பதே இந்த புதிய இலக்குகளின் மையமாக அமைந்திருக்கிறது.

மதுரையில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய நிலைப்புத்தன்மைக்கான மையம், சீனாவின் ஷென்சென் நகரில் அமைந்துள்ள கோட்ஸ் நிலைப்புத்தன்மை மையத்தோடு இணைந்து செயல்படும். தயாரிப்பு செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களை மறுசுழற்சி பொருட்களாகவும் மற்றும் புதுப்பிக்கத்தக்க பொருட்களாகவும் மாற்றும் பணியை இந்த இரு மையங்களும் விரைவுபடுத்தும். ஆடைகள், காலணிகள் மற்றும் செயல்திறன் பொருட்களுக்கான நிலைப்புத்தன்மையுள்ள தையல் நூல்களுக்கு புதிய தலைமுறை பொருட்களை புத்தாக்கமாக கண்டறிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்காக இந்த இரு மையங்களும் ஒருங்கிணைந்து செயல்படும்.  

பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்களின் உருவாக்கத்தை உயர்த்தும் பணிக்காக அடுத்த ஐந்து ஆண்டுகள் காலஅளவில் 10 மில்லியன் யுஎஸ் டாலரை முதலீடு செய்ய கோட்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கும் நிலையில் இந்த நிலைப்புத்தன்மை மையம் நிறுவப்பட்டிருப்பது அதன் ஒரு பகுதியாகும்.

கோட்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை செயல் அலுவலர்,  ராஜிவ் சர்மா இது பற்றி பேசுகையில், “கோட்ஸ் நிறுவனத்தில் நூற்பு மற்றும் முறுக்கேற்றலுக்கான ‘உயர் நேர்த்தி மையமாக’ மதுரையில் இந்த மிக நவீன உற்பத்தி மையம் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நிகர பூஜ்ஜியம் என்பது இலக்கை நோக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீது நாங்கள் வலுவான பொறுப்புறுதி கொண்டிருக்கிறோம். நமது செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும் மின்சக்தி ஆற்றலை பசுமை ஆற்றலாக மாற்றும் உத்தி மற்றும் பொருட்களின் நிலைமாற்றம் ஆகியவற்றோடு சேர்த்து இம்மையமும் அடிப்படை ஆதார அம்சங்களாக இருக்கும்” என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form