பிரிட்டானியா மதுரை தொழிற்சாலையில் பெண் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பேக்கரி ஃபுட்ஸ் நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதன் மதுரை உற்பத்தி தொழிற்சாலையில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை 70 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தில் தற்போது சுமார் 1400-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர், அதில் 65 சதவிகிதம் பேர் பெண்கள் ஆவார்கள். பிரிட்டானியா அதன் மனிதவளத்தில் பெண்களின் பங்கெடுப்பை அதிகரிப்பதன் மூலம், தேசிய அளவில், 2024-ஆம் ஆண்டின் இறுதிக்குள், தற்போது 41 சதவீதமாக இருக்கும் மொத்த பன்முகத்தன்மை விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்தும் நோக்கினைக் கொண்டுள்ளது.

இது பற்றி பேசிய பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையின் -  உற்பத்திப்பிரிவின் தலைமை அதிகாரி இந்திரானில் குப்தா, “மதுரையில் உள்ள எங்கள் உற்பத்தி தொழிற்சாலையில் இன்ஜினியரிங், உற்பத்தி மற்றும்  அரைத்தல், பேக்கிங், தூய்மை பணிகள்,  சேமிப்பு கிடங்கு பராமரிப்பு, ஆய்வுக்கூட பரிசோதனைகள், உணவகம் மற்றும் தொழிற்சாலை வளாகப் பாதுகாப்பு என பல்வேறு பணிகளில் பெண்கள் பணிபுரிகின்றனர். பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளித்ததால் ஆலையின் செயல்திறன் அதிகரித்து, அதன் செயல்பாடுகளுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனால் ஊழியர்களிடம் ஆலை நமக்கான இடம் என்கிற உணர்வை அளித்ததுடன், பணி விலகல்களை குறைக்கவும் உதவியது. பன்முகத்தன்மையை அதிகரிக்க நாங்கள் மேற்கொள்ளும் முன்முயற்சிகள் மூலம், ‘சில பணிகளுக்கு ஒரு பாலினத்தவர் மட்டுமே பொருந்துவார்கள்’ என்கிற பிற்போக்கான சிந்தனைக்கு எதிராக நாங்கள்  சவால் விடுக்கிறோம். அதே நேரத்தில் வரவேற்கத்தக்க மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை விரிவுபடுத்துவது, மற்றும் பணிக்கு வரும் தனிநபர்களிடம் ஆலை நமக்கான இடம் என்கிற உணர்வை வளர்ப்பதும் எங்கள் நோக்கமாகும்,” என்று கூறினார்.

ஒரு பொறுப்புணர்வுள்ள உலகளாவிய முழுமையான உணவு நிறுவனமாக மாறுவதற்கு பிரிட்டானியாவின் நிலைத்தன்மை கட்டமைப்பு அவசியமாகும், அதில் பன்முகத்தன்மை என்பது ஒரு முக்கிய தூணாக உள்ளது. பிரிட்டானியா ஒவ்வொரு மாதமும் அதன் பன்முகத்தன்மையை மேம்படுத்தும் திட்டத்தின் வளர்ச்சியை - ஆட்சேர்ப்பு, ஊழியர்களின் ஈடுபாடு, பதவி உயர்வு மற்றும் பணிவிலகல் போன்ற அளவீடுகளை அவ்வவற்றின் இலக்குகளோடு ஒப்பிட்டு முன்னேற்றத்தை அளவிடுகிறது.  பிரிட்டானியா நிறுவனத்தின் ஒரு முன்மாதிரி தொழிற்சாலையாக மதுரை தொழிற்சாலை உருவாகியுள்ளது. 

பாலினம் குறித்த நுண்ணறிவு திட்டங்கள், கொள்கை வழிகாட்டுதல்கள், மற்றும் வருடாந்திர பிஒ ஸ்எச் பயிற்சிகள் மூலம் ஊழியர்களுக்கு   விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வளாகம் முழுவதையும் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய செக்யூரிட்டி ஊழியர்கள், மாலை நேரத்திற்குப் பிறகு வரும் ஷிஃப்ட்டுகளுக்கு ஊழியர்களை அழைத்து வருதல் மற்றும் திரும்ப கொண்டு சென்று விடும் வசதிகள் ஒரு முழுமையான பணியிடமாக உருவாக இந்த தொழிற்சாலை  பல முயற்சிகளை மேற்கொள்கிறது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form