பெருந்துறையில் ஆன்செல் ஆலை திறப்புதனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ஆன்செல் நிறுவனம் 664 கோடி ரூபாய் செலவில் கோவையில் பேக்கிங் அன்ட் கதிர்வீச்சு ஆலையை அமைத்துள்ளது. இந்த ஆலையின் முதல் கட்ட செயல்பாடுகள் 24-ந்தேதி துவக்கப்பட்டு உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நீல் சால்மன், செயல்பாடுகள் பிரிவு மூத்த துணைத் தலைவர் ஜான் மார்ஸ்டன், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உற்பத்தி பிரிவு துணைத் தலைவர் ஜெரால்ட் கோ, உற்பத்தி செயல்பாடுகள் பிரிவு துணைத் தலைவர் திலீப் சவைகர், உற்பத்தி செயல்பாடுகள் இயக்குனர் அன்டன் பெர்னாண்டோ மற்றும் குவாரா இயக்குனர் கோபு தேவராஜன் உள்ளிட்ட ஆன்செல் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் ஆலை துவக்கி வைக்கப்பட்டது.

  இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு ஆலைத் திட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவில் ஆன்செல் விரிவாக்கத் திட்டங்கள் குறித்த வீடியோ மூலம் விளக்கி கூறப்பட்டது.

2021-ம் ஆண்டு ஜூலை மாதம் மாநில தொழில் துறை மற்றும் வழிகாட்டுதல் தமிழ்நாடு குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் 664 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஆலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதன் புதிய ஆலை செயல்படத் தொடங்கியது. இங்கு அறுவை சிகிச்சை மற்றும் வாழ்க்கை அறிவியல் சந்தைக்கு தேவையான கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. உலக அளவில் வளர்ந்து வரும் ஆன்செல் தயாரிப்புகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய ஆலை முக்கிய பங்கு வகிக்கும்.

இதன் முழுமையான கட்டமைப்பு பணிகள் 2024-ம் ஆண்டில் நிறைவடையும். 2025-ம் ஆண்டிற்குள் நிலையான கட்டமைக்கப்பட்ட சூழலில் இந்தியா உலகத் தலைவராக மாறுவதற்கான நோக்கத்தை ஆதரிக்கும் வகையில் 2001 இந்திய பசுமைக் கட்டிடக் குழுவின் வழீகாட்டுதல்களின்படி கோவையில் உள்ள இந்நிறுவனத்தின் ஆலைக் கட்டிடங்கள் அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோவையில் உள்ள ஆலையில் சுமார் 1800 பேர் பணி அமர்த்தப்பட உள்ளனர். இதில் பெரும்பாலான பணியாளர்கள் உள்ளூர் பகுதியிலிருந்து பணியமர்த்தப்பட இருக்கிறார்கள்.

இந்த ஆலை செயல்பாடுகள் துவக்கம் குறித்து ஆன்செல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நீல் சால்மன் கூறுகையில், ”தற்போது இங்கு துவக்கப்பட்டுள்ள பணியானது எங்களின் 130 ஆண்டுகால வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த பெரிய முதலீட்டின் மூலம் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற உள்ளோம். நாடு முழுவதும் உள்ள சுகாதார நிபுணர்களுக்கும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் மிகவும் புதுமையான மற்றும் மிக உயர் தரமான அறுவை சிகிச்சை கையுறைகளை ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் நாங்கள் தயாரிக்க உள்ளோம்” என்றார்.

அவர் மேலும் பேசுகையில், “ இந்த துவக்க விழா தளத்திற்கு எனது முதல் வருகையின் போது, இங்குள்ள உற்பத்தி குழுவினர் என்னை வெகுவாக கவர்ந்தனர். இங்கு உள்ள கட்டமைப்புகள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தத் திட்டத்திற்காக எங்களுடன் இணைந்து சிறப்பாகப் பணியாற்றிய தமிழக அரசுக்கும், எங்களின் பல உள்ளூர் கூட்டு நிறுவனங்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் பொறியியல் மற்றும் தள நிர்வாகக் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


 

Post a Comment

Previous Post Next Post

Contact Form