வேலூரில் ஓலா எல்க்ட்ரிக்கின் முதல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் துவக்கம்இந்தியாவின் மிகப்பெரிய மின்சார வாகன நிறுவனம் ஓலா எலக்ட்ரிக்,வேலூரில் அதன் நேரடி வாடிக்கையாளர் (டி2சி) சேவைகளை விரிவாக்கும் நோக்கில்விருதம்பட்டு, சர்ச் காலனி, சித்தூர் - வேலூர் நெடுஞ்சாலையில், புதிய ஓலா எக்ஸ்பீரியன்ஸ் சென்டரைத் திறந்துள்ளது. நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இது போல 200 எக்ஸ்பீரியன்ஸ் மையங்கள் செயல்பட்டு வருவதையடுத்து, ஓலா நிறுவனம் வரும் மார்ச் 2023-க்குள், ஏற்கனவே இயங்கிவரும் அதன் நெட்வொர்கிற்குள் 500 மையங்களை இணைக்கவுள்ளது. அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தின் கீழ் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட்டுள்ள இந்த ஓலா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் - மின்சார வாகன ஆர்வலர்கள் ஓலா நிறுவனத்தின் ஈவி தொழில்நுட்பத்தை நேரடியாக அனுபவித்து உணரவும், அவ்வாகனங்கள் தொடர்பான எந்தவிதமான தகவலையும் சேகரிக்கவும் அனுமதிக்கின்றன.  இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள், ஓலா ஸ்கூட்டர்களின் விற்பனைக்குப் பிந்தைய கவனிப்பு மற்றும் பராமரிப்பிற்கான ஒரே இடமாக இரட்டிப்பு சேவையை வழங்கும்.

ஓலா நிறுவனம் சமீபத்தில் அதன் சேவை நெட்வொர்க்கிற்கு ஒரு முழுமையான 360 டிகிரி அணுகலை வழங்கும் - ‘ஓலா கேர்’ சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதன் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே அல்லது அருகிலுள்ள ஓலா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களில் சேவைகளைப் பெறும் சௌகரியம் உள்ளது. ஓலா கேர் மற்றும் ஓலா கேர்+ சந்தாக்கள் மூலம் ஓலா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வீட்டிற்கோ அல்லது தொலைதூரப் பகுதியில் இருக்கும் போதோ விரிவான சேவை மற்றும் உதவி சேவைகளை வழங்குகிறது.  எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ வாகனங்களை சோதனை ஓட்டம் செய்ய வாடிக்கையாளர்கள் இந்த மையங்களை அணுகலாம். மேலும், வாகனங்களை வாங்குவதற்கு உரிய உதவியைப் பெறுதல், நிதி உதவிக்கான வழிமுறைகள் பற்றிய விவரங்களைப் பெறுதல், ஓலா செயலியில் அவர்களது வாகனம் வாங்கும் செயல்முறையை நிறைவு செய்தல் ஆகியவற்றில் ஓலாவின் பிராண்ட் சாம்பியன்களிடமிருந்து தேவையான உதவிகளை வாடிக்கையாளர்கள் இங்கு நாடலாம்.

வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவை வரம்புகளைக் கருத்தில் கொண்டு, ஓலா  சமீபத்தில் அதன் எஸ்1 போர்ட்ஃபோலியோவை 6 ரகங்களுடன் விரிவுபடுத்தியது. 2கிலோ வார், 3கிலோ வாட் மற்றும் 4கிலோ வாட் பேட்டரி பேக்குகளால் இயக்கப்படும், ஓலா எஸ்1 ஏர் வாகனத்தின் புதிய வகைகள் முறையே ரூ.84,999, ரூ.99,999 மற்றும் ரூ.109,999 என்ற கவர்ச்சிகரமான விலைகளில் கிடைக்கின்றன. இதன்  விற்பனைத் துவக்கம் வரும் மார்ச் 2023 முதல் ஆரம்பித்து, உடனடி டெலிவரி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  முன்பதிவுகள் ரூ.999-க்கு துவங்குகிறது. இதன் விற்பனைத் துவக்கம், சோதனை ஓட்டம், மற்றும் டெலிவரிகள் ஜூலை 2023 முதல் தொடங்கவுள்ளது.

இந்தியா, மின்சார வாகனங்களுக்கு மாறிவருவதை மேலும் விரைவுபடுத்தும் வகையில், ஓலா எஸ்1 ப்ரோ வாகனத்திற்கு ரூ. 12,000/- தள்ளுபடியுடன், அதன் ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்கிற்கான ஒரு வருட இலவச அணுகல் என, ஓலா நிறுவனம்  அதன் லவ் ஆன் 2 வீல்ஸ்’ என்கிற பிரச்சாரத்தின் மூலம் பிரத்யேக சலுகைகளை அறிவித்துள்ளது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் இப்போது முன்பணம் ஏதுமில்லாமல் ஓலா ஸ்கூட்டரை வீட்டிற்கு வாங்கிச் செல்லலாம், ரூ.2,499/-இல் துவங்கும் மாதாந்திர சுலபத் தவணைத் திட்டத்தினை  தேர்வுசெய்யலாம், 8.99 சதவிகிதத்துடன் துவங்கும் குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள், மற்றும் செயலாக்கக் கட்டணமில்லா சேவைகளுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் கூடுதல் தள்ளுபடியையும் பெற்று மகிழலாம். இவை தவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் பெட்ரோல் ஸ்கூட்டர்களை புத்தம் புதிய ஓலா எஸ்1 ஸ்கூட்டர்களாக மாற்றிக் கொள்ளவும், ரூ. 4,000/- வரை போனஸைப் பெறவும் வாய்ப்புகள் உள்ளன என ஓலா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form