ரெடிங்டன் அறக்கட்டளை அதன் சிஎஸ்ஆர் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, டிஎச்எஎன் அறக்கட்டளை உடன் இணைந்து சிஎஸ்ஆர் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தியுள்ளது. நீர்நிலைகளை புதுப்பித்து மீட்டெடுத்தல், புதைபடிவ எரிபொருளை உயிரி எரிபொருளாக மாற்ற கிராமப்புற சமூகங்களுக்கு உதவுவதன் மூலம் காலநிலை மாற்றத்தின் அபாயத்தைத் தணித்தல் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.கல்வராயன் மலையில், 25-30 சதவீத மக்களுக்கு பாதுகாப்பான நீர் விநியோகம் கிடைக்காத நிலையில், தற்போது சுமார் 60 சதவீத குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைத்துள்ளது.
நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியின் கீழ், ரெடிங்டன் 6 கிராம குளங்கள், 28 சமுதாயக் கிணறுகள் மற்றும் 6 பள்ளிகளில் 6 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதுப்பித்து தந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலைகளில் உள்ள 40 கிராமங்கள் பயனடைகின்றன. இதன் விளைவாக இக்கிராமங்களில் நீர் வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆண்டு முழுவதும் வீட்டு உபயோகத்திற்கும், கால்நடை நுகர்வுக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் கிடைப்பதை எளிதாக்குகிறது.
கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலைகள் இரண்டிலும், 80 சதவீதத்துக்கும் அதிகமான கிராமங்கள் மின்மயமாக்கப் பட்டிருந்தாலும், 75 சதவீத வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளை வழங்குவதற்கான அதன் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, ரெடிங்டன், கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலைகளில் வசிக்கும் 600 பழங்குடியின குடும்பங்கள் எதிர்கொள்ளும் கடுமையான மின் பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க சூரியஒளி மின்கருவிகளை வழங்கியுள்ளது. கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலைகளில் உள்ள பழங்குடியின மக்கள் சூரிய மின்சக்தியை அணுகவும், வீட்டு உபயோகம், கால்நடைகள் மற்றும் விவசாய நோக்கங்களுக்காக ஆண்டு முழுவதும் தரமான நீரைப் பெறவும் இந்த திட்டத்தில் ரெடிங்டன் சுமார் 2 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
வெள்ளிமலையில் நடைபெற்ற உள்ளூர் நிகழ்வில், 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ரெடிங்டன் அறக்கட்டளை, சோலார் பேனல், எல்இடி பல்புகள் மற்றும் பேட்டரி ஆகியவற்றைக் கொண்ட சோலார் கிட்களை அப்பகுதி மக்களுக்கு வழங்கியது. இது அப்பகுதி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும். ரெடிங்டன் அறக்கட்டளை டிஎச்எஎன் அறக்கட்டளையுடன் இணைந்து, தமிழ்நாட்டின் தொலைதூர கிராமங்களில் சமூக மேம்பாட்டிற்கான இத்தகைய முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செல்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் காலநிலை மாற்ற அபாயங்களைக் குறைக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கப்படுகிறது.
"ரெடிங்டன் அறக்கட்டளையில், கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பேரிடர் எதிர்விளைவு ஆகிய துறைகளில் சமூக மேம்பாட்டிற்கு மாற்றத்தின் முனைவாக நாங்கள் பணியாற்றுகிறோம். கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலைப்பகுதி மக்களுக்கான எங்கள் முயற்சி, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு தாழ்மையான முயற்சியாகும், அவர்களுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை எளிதாக அணுகி, அவர்கள் வாழ்க்கை முறையில் நிலைத்தன்மையை கொண்டு வர உதவுகிறது” என ரெடிங்டன் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் நடராஜன் தெரிவித்தார்.