லாஜிஸ்டிக்ஸில் தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்த டெல்ஹிவரி திட்டம்

 


இந்தியாவின் மிகப்பெரிய முழுமையான ஒருங்கிணைக்கப்பட்ட லாஜிஸ்டிக்ஸ் வழங்குநரான டெல்ஹிவரி,   வேலை தேடும் இளைஞர்களுக்கு, லாஜிஸ்டிக்ஸ் துறையில் ஒரு வேலையை  உருவாக்க அதிகாரம் அளிக்கும் முயற்சியான, டெல்ஹிவரி பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்புத் திட்டத்தை  தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம், தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு   நுழைவு மற்றும் இடைநிலை செயல்பாட்டுப் பணிகளில் உத்தரவாதமான வேலைகளை உறுதி செய்கிறது.பிப்ரவரி 19, 2023 அன்று, இந்த நிறுவனம் குர்கானில் 5 வார பயிற்சித் திட்டத்திற்கு மாணவர்களைத் தேர்வு செய்ய நாடு தழுவிய நுழைவுத் தேர்வை நடத்தும், ஆரம்பத்தில் பலவற்றின் மத்தியில் கங்காநகர், உஜ்ஜைன், குரூர், புருலியா மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட்ட 25 இரண்டடுக்கு மற்றும் மூன்றடுக்கு  நகரங்களில் கவனம் செலுத்துகிறது.

22 முதல் 32 வயதுக்குட்பட்ட 10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ பெற்றவர்கள்  மற்றும் அடிப்படை ஆங்கில வாசிப்பு மற்றும் எழுதும் திறன் கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள். இந்த பயிற்சியானது, செயல்பாட்டு நடைமுறைகள், மென்பொருள் கருவிகள், மென் திறன்கள் மற்றும் மக்கள் மேலாண்மை போன்ற பாடங்களை உள்ளடக்கி, வகுப்பறை மற்றும் பயிற்சி ஆகிய இரண்டையும் முக்கியமாகக்  கொண்டிருக்கும், பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்  இந்தியா முழுவதிலும் உள்ள டெல்ஹிவரி இல்  உள்ள வசதிகளில் காலியாக உள்ள  நிர்வாகப் பணிகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த முயற்சி குறித்து டெல்ஹிவரி  தலைமை மனித வள அதிகாரி பூஜா குப்தா கூறுகையில், “ இந்த முயற்சி, நாடு முழுவதும் உள்ள திறமையாளர்களுடன் ஈடுபடுவது மற்றும் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றில்  பாதுகாப்பான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்ற எங்களது நீண்டகால நோக்கத்துடன் இணங்குகிறது. எங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குழுவை  வரவேற்கவும், அவர்களின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்காக டெல்ஹிவரியில் முதலீடு செய்யவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்." என்று கூறினார்.

டெல்ஹிவரி  அகாடமியின் தலைவரான சுராஜு தத்தா இது குறித்துப் பேசுகையில், "எங்கள் 5 வாரப் பயிற்சியானது, டெல்ஹிவரி அகாடமியால் வடிவமைக்கப்பட்ட, லாஜிஸ்டிக்ஸ் இல்  ஆயத்தமான திறமைக் குழுவை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிற ஒரு விரிவான, நிறுவனத்துக்குள் அமைந்த  திட்டமாகும். இந்த திட்டத்தின் ஆழம் மற்றும் அகலம், லாஜிஸ்டிக்ஸ் இல்  சிறந்து விளங்க தேவையான அனைத்து திறன்களையும் கொண்ட இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் ."என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form