இந்தியாவில் டூலக்ஸ் பெயின்ட்கள் தயாரிக்கும் அக்சோநோபல் அடுத்த படியான, உயர்தர பெயின்டை மதுரையில் அறிமுகம் செய்கிறது. வெளிப்புற பெயின்டுகளில் அதன் நம்பகமான வெதர்ஷீல்டு வரிசையில் புதிய டூலக்ஸ் வெதர்ஷீல்ட் பவர்ஃப்ளெக்ஸ் என்ற பெயரில் அதை அறிமுகம் செய்கிறது. இந்தப் புதிய வெதர்ஷீல்ட் பவர்ஃப்ளெக்ஸில் கம்பெனியின் புதிய மும்மடங்கு பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளது, அதாவது மாற்றப்பட்ட பியு அக்ரெலிகின் சக்தியோடு வருகிறது. இதன் விளைவாக எப்படிப்பட்ட வானிலையிலும் வீட்டின் வெளிப்புறம் 12 வருடங்கள் வரை நிலைத்திருக்கும் என்ற வாக்குறுதியைக் கொடுக்க முடிகிறது. இந்தப் புத்த ம்புதிய டூலக்ஸ் வெதர்ஷீல்ட் பவர்ஃப்ளெக்ஸ் நகரம் முழுவதிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டூலக்ஸ் சில்லறை விற்பனை நிலையங்களில் இப்போது கிடைக்கிறது.
மும்மடங்கு பாதுகாப்பு தொழில்நுட்பம் காரணமாக வீட்டின் வெளிப்புறங்களுக்கு உயர்தர வெடிப்பு பாதுகாப்பு, உயர்தர வானிலை எதிர்ப்பு மற்றும் உயர்தர தண்ணீர் எதிர்ப்பு திறன்கள் கிடைக்கின்றன.புத்தம் புதிய மாற்றப்பட்ட பியு அக்ரெலிக் தொழில்நுட்பம் காரணமாக மேற்பரப்பில் ஏற்படும் வெடிப்புகள் என்ற பிரச்சினையை வெற்றிகரமாக சமாளிக்க முடிகிறது. இந்த பெயின்டின் பலமான அதேசமயம் இழுவை திறன் கொண்ட பிலிம் அமைப்பே இதற்கு காரணமாகும். கூடுதலாக, இது “சாம்பியன்” தயாரிப்பு என்ற பெயரைப் பெற்றிருப்பதால் ஈரப்பதம், பாசி, பூஞ்சனம், காரப் பொருள் சேர்க்கை, பெயின்ட் உறிதல் போன்றவை ஏற்படாமல் வீட்டைப் பாதுகாப்பதால் அவை நீண்ட காலத்திற்கு புத்தம் புதிதாகக் காட்சியளிக்கும்.
“வானிலை காரணமாக வீடுகள் மீது பயங்கர தாக்கம் ஏற்பட்டு தங்கள் வீடுகளின் வெளிப்புறம் நீண்ட காலத்திற்கு அழகாகக் காட்சியளிக்கும் விதமாக அதைப் பாதுகாக்கும் உயர்தர வெளிப்புற பெயின்ட் தேவை என்று மதுரையில் உள்ள கஸ்டமர்கள் கேட்கிறார்கள். டூலக்ஸ் வெதர்ஷீல்ட் பவர்ஃப்ளெக்ஸில் புதிய மும்மடங்கு பாதுகாப்பு தொழில்நுட்பம் இருப்பதால் அது வீடுகளுக்கு நீண்டகால பாதுகாப்பை அளித்து 12 வருடங்கள் வரை பாதுகாப்பை உறுதி செய்வதால் வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு அதிக மன அமைதியை அளிக்கிறது. இதன் காரணமாக அதுதான் வீட்டின் சாம்பியன் என்ற பெயரைப் பெறும்” என்று அக்சோநோபல் இண்டியாவின் நிர்வாக இயக்குனரான ராஜீவ் ராஜகோபால் கூறினார்.