ஆசியாவின் மிகப்பெரிய உயர் எட்டெக் நிறுவனமான அப்கிராட், அதன் பிராண்டான ‘டூரிங்மைண்ட்ஸ்’ உடன் தயாரிப்புப் பிரிவில் மற்றொரு மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது.150 க்கும் மேற்பட்ட முழுநேர ஆசிரியர்களுடன் (94 சதவிகித பிஎச்டிகள்), ஏஐ மற்றும் எம்எல் போன்ற மிகவும் விரும்பப்படும் வளர்ந்து வரும் தொழில்நுட்பப் பகுதிகளில் அப்கிராட் சிறந்த திறன்களுடன் விளங்குகிறது. அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்கான நிறுவனங்களின் மிகப்பெரிய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக டூரிங்மைண்ட்ஸ் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
ஹைதராபாத், பெங்களூரு மற்றும் டெட்ராய்டில் உள்ள அவர்களின் அலுவலகங்கள் ஏற்கனவே 250 தயாரிப்பு பொறியாளர்களைக் கொண்ட தொழில்முறை பணியாளர்களுடன் இயங்குகின்றன. மேலும் அடுத்த காலாண்டில் வணிகத்தை இரட்டிப்பாக்கும் நோக்கம் உள்ளது. 30 கோடி ரூபாய் முதலீட்டில் டூரிங் மைண்ட்ஸ் தற்போது 15க்கும் அதிகமான ஆஃப்லைன் வசதிகளுடன் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செயல்படும் என டூரிங்மைண்ட்ஸ் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
Tags
Business