காசி தமிழ்ச் சங்கமத்தில் மகாகவி பாரதி குறித்து விவாதம்



காசி தமிழ்ச் சங்கமத்தில் நவம்பர் 25 அன்று   ”இன்ஸ்பிரேஷன்ஸ் ஃப்ரம் மகாகவி சுப்ரமணிய பாரதி அண்ட் ஹிஸ் காசி கனெக்ட்” என்ற தலைப்பில் கல்வி அமர்வு நடைபெற்றது. சிறந்த தேசியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான பாரதியார் குறித்து புகழ்பெற்ற பிரமுகர்கள் அவர்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பாரதி பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே உள்ள ஆழமான செயல்பாடு தொடர்புகளைக் கண்டறிந்தார், குறிப்பாக காசி மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றுக்கு இடையேயான ஆழமான தொடர்பைக் கண்டறிந்தார் என்பது சாராம்சமாக இருந்தது. இந்த விவாதம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து சுதந்திரத்தை அடைய பாடுபடுவதில் சுப்பிரமணிய பாரதி ஆற்றிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டியது. பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த விவாதம் எடுத்துரைத்தது. இதன் மூலம் நமது நாட்டின் தலைசிறந்த தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவஞானிகளின் மகத்தான பங்களிப்பை புதிய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் அமையும் என்றனர்.

சமூக அறிவியல் துறையின் டீன் மற்றும் பேராசிரியர் பிந்தா பரஞ்சபே நினைவுப் பரிசுகளை வழங்கி பிரமுகர்களை வரவேற்றார். ஆங்கில துறை டாக்டர் திருத்தி நிகழ்ச்சியை நடத்தினார். கல்விக் கலந்துரையாடலுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கவிஞர்கள் தங்கள் எழுத்துக்களை முன்வைக்க கவிதை வாசிப்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. காசி தமிழ் சங்கமத்தின் முக்கியத்துவம், தமிழ்நாடு மற்றும் கலாச்சாரத்தில் காசியின் தாக்கம், இரு கலாச்சாரங்களுக்கிடையேயான ஆன்மீகத் தொடர்பு மற்றும் காசிக்கும் தமிழகத்துக்கும் இடையேயான கல்வி தொடர்புகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் வழங்கினர்.

நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினரான, தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சுப்பிரமணிய பாரதி அவரது வாழ்க்கை மற்றும் சிந்தனைகளை வடிவமைப்பதில் பண்டைய நகரமான காசி ஆற்றிய பங்கு பற்றி விரிவாக விவாதித்தார். பாரதியாரின் கருத்துகளையும் ஆளுமையையும் வடிவமைப்பதில் காசிக்கு முக்கியப் பங்கு உண்டு என்று ஆளுநர் கூறினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மதிப்பு அடிப்படையிலான கல்வியை வழங்க அவர்கள் அளிக்கும் பங்களிப்பை பாராட்டிய ஆளுநர், பிஎச்யு நிறுவனர் மகாமான பண்டிட் மதன் மோகன் மாளவியா அவர்களின் முயற்சிகளையும், பங்களிப்பையும் நினைவுகூர்ந்து அவருக்குப் பாராட்டு தெரிவித்தார். பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையில் காசியில் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றத்திற்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான வி.மாலன் நாராயணன், காசி, சுப்பிரமணிய பாரதியின் எண்ணங்களையும் பார்வைகளையும் வடிவமைத்தது மட்டுமல்லாமல், இந்த நகரத்தில் இருந்ததைப் போலவே மீசையும் தலைப்பாகையும் வைத்து அவரது தோற்றத்தையும் வடிவமைத்தது, என்று அவர் கூறினார். சுப்பிரமணிய பாரதி புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான ஷெல்லியின் படைப்புகளைப் படிக்கத் தொடங்கி, அவருடைய எழுத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் என்றும் அவர் ஷெல்லி - தாசனை தனது புனைப்பெயராகப் பயன்படுத்தத் தொடங்கினார் என்று ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் எழுதும் கல்வியாளர் பேராசிரியர் பி.ராஜா கூறினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் எ.கங்காதரன் வரவேற்புரை ஆற்றியபோது, பிஎச்யு-க்கும் தமிழகத்துக்கும் இடையேயான நீண்ட கால தொடர்புகள் குறித்துப் பேசினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களை இந்தப் பல்கலைக்கழகம் ஈர்க்கிறது எனவும், இங்கு படிக்க ஆராய்ச்சி திட்டங்களில் சேர்ந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form