மதுரை நகரின் மையப் பகுதியில் டிவிஎஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஜி ஸ்கொயர் குழுமம் கையகப்படுத்தியுள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள இந்த நிலம், டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் டி.வி.சுந்தரம் ஐயங்கார்-க்கு ஒரு காலத்தில் சொந்தமான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சொத்தாகும்.
இந்த நிலம், மதுரையில் டிவிஎஸ் குழுமம் காலூன்றிய காலகட்டத்தில் முதன் முதலாக வாங்கப்ப்ட்ட சொத்து என்று கூறப்படுகிறது. மதுரை நகரின் பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ள இந்த இடம், பிராந்தியத்தில் டிவிஎஸ் குழுமத்தின் ஆரம்பகால அடையாளமாகவும், பாரம்பரிய வர்த்தக மையமாக இருந்து வந்தது
தற்போது இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு மனை மேம்பாட்டு நிறுவனமாக முன்னணி வகிக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனம் டிவிஎஸ் நிறுவனச் சொத்தை வாங்கியிருக்கிறது. இந்த இடத்தில் வீட்டு மனை மட்டுமல்லாமல் வர்த்தக இடமாகவும் கட்டிடங்கள் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Tags
Business
.jpeg)