MMTC-PAMP மதுரையில் முதல் தூய்மை சரிபார்ப்பு மையத்தை தொடங்கி சில்லறை விற்பனை தடத்தை விரிவுபடுத்துகிறது


 

இந்தியாவின் ஒரே LBMA-அங்கீகாரம் பெற்ற தங்கம் மற்றும் வெள்ளி சுத்திகரிப்பு நிறுவனமான MMTC-PAMP, தமிழ்நாட்டின் மதுரையில் அதன் முதல் பிரத்யேக தூய்மை சரிபார்ப்பு மையத்தை தொடங்கியுள்ளது. இந்த கடையை ஜோஸ் அலுக்காஸ் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. வர்கீஸ் அலுக்காஸ் மற்றும்  தங்கமயில் ஜுவல்லரி லிமிடெட் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநர் திரு. பா.ரமேஷ் திறந்து வைத்தனர். MMTC-PAMP நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி மற்றும் CFTO திரு. சமித் குஹா மற்றும் பிற அதிகாரிகள் உடனிருந்தனர். MMTC-PAMP, கடை எண். 2/3, கன்சாமேட்டு தெரு, BSR வளாகம், தெற்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625001 என்ற முகவரியில் அமைந்துள்ளது. 

மதுரையில் திறக்கப்பட்டுள்ள புதிய  தூய்மை சரிபார்பு மையம், MMTC-PAMP இன் இந்தியா முழுவதும் வளர்ந்து வரும் பிரத்யேக விற்பனை நிலையங்களின் சங்கிலியில் மேலும் ஒரு சேர்க்கையாக இருக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுவிஸ் கைவினைத்திறனுடன் தடையற்ற சில்லறை விற்பனை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தூய்மை சரிபார்ப்பு மையங்களின் வெற்றியைத் தொடர்ந்து மதுரையில் திறக்கப்பட்டுள்ள புதிய பிரத்யேக ஸ்டோர் வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கத்தை நிபுணத்துவத்துடன் மதிப்பீடு செய்து MMTC-PAMP இன் வெளிப்படையான செயல்முறை மூலம் மீண்டும் விற்க வாய்ப்பளிக்கும். இதன் மூலம் தங்கத்தின் உண்மையான மதிப்பு மிகத் துல்லியமாக கணிக்கப்படும். நகைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் MMTC-PAMP நிறுவனத்தின் தங்கம், எலக்ட்ரோலைடிக் ரிஃபைனிங்  முறையில் தயாரிக்கப்படுவதால், அதில் மாசுக்கள் மிகக் குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக நகைகள் சீரான தரத்தில் கிடைக்கிறது. 

மேலும் கடினக் கறை, நிற வேறுபாடு, பிளவு போன்ற குறைகள் குறைக்கப்படுகின்றன. மேலும் தயாரிப்பின் மொத்த எடை உயர்வதோடு, அச்சிடப்பட்ட விலையை விட நுகர்வோருக்கு அதிக மதிப்பு கிடைக்கிறது. ரெஸ்பான்சிபிள் ஜுவல்லரி கவுன்சில் சான்றிதழின் மூலம், வெளிப்படைத் தன்மை கூடுதலாக உறுதி செய்யப்படுகிறது.இந்த மதிப்பீடு, MMTC-PAMP நிறுவனத்தின் முன்னேற்றமான தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம், பாரம்பரிய டச் ஸ்டோன் (Touchstone) முறையில் ஏற்படும் மதிப்பு இழப்பின்றி, மிகுந்த துல்லியத்துடன் தங்கத்தின் தரம் பரிசோதிக்கப்படுகிறது. 

திறப்பு விழாவில், MMTC-PAMP நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி மற்றும் CFTO திரு. சமித் குஹா அவர்கள் பேசுகையில், “மதுரையில் எங்கள் தூய்மை சரிபார்ப்பு மையம் தொடங்கப்பட்டிருப்பது, நாடு முழுவதும் எங்கள் சில்லறை வணிகப் பங்களிப்பை விரிவுபடுத்தும் ஒரு முக்கியமான கட்டமாகும். இந்த புதிய பிரத்யேக ஸ்டோர் மூலம், நகைக் கடைக்காரர்களும், நுகர்வோர்களும் எங்கள் முன்னேற்றமான தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் அடிப்படையிலான தங்க மதிப்பீடு மற்றும் சுத்திகரிப்பு நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.  இந்தக் கடையின் மூலம், மதுரையில் உள்ள நுகர்வோருக்கு இந்தியாவின் தூய்மையான 24K 999.9+ தங்கம் மற்றும் வெள்ளி தயாரிப்புகளை நேரடியாக அணுகும் வாய்ப்பையும் வழங்குகிறோம்” என்றார்.

விழாவில் ஜோஸ் அலுக்காஸ் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. வர்கீஸ் அலுக்காஸ் அவர்கள் பேசுகையில், “இந்தியாவின் விலையுயர்ந்த உலோகத் துறையில் MMTC-PAMP ஒரு சிறப்பான பிராண்டாகும்.  இந்தியாவின் முன்னணி நகை உற்பத்தியாளர்களில் ஒருவராகிய நாங்கள், தங்க சுத்திகரிப்பில் அவர்களின் சிறப்பான நிபுணத்துவத்தினால், எப்போதும் MMTC-PAMP-ஐ எங்கள் நம்பகமான கூட்டாளியாக தேர்வு செய்கிறோம்” என்றார்.

தங்கமயில் ஜுவல்லரி லிமிடெட் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநர் திரு. பா.ரமேஷ் அவர்கள் பேசுகையில், “MMTC-PAMP நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், சமரசம் செய்யப்படாத தரம், மதிப்பு மற்றும் நம்பகத்தன்மையை பிரதிபலிக்கின்றன. தங்க சுத்திகரிப்பில் அவர்களின் ஒப்பற்ற நிபுணத்துவத்திற்காக இந்த பிராண்டு பரவலாக அறியப்படுகிறது. மேலும், எடை மற்றும் தூய்மையில் அசைக்க முடியாத சீரான நிலைத்தன்மையை வழங்கி வருகிறது” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form