கோட்ரெஜ் டிஇஐ கேஸ் ஸ்டடி சவால்



கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்க முன்முயற்சியான கோத்ரெஜ் டிஇஐ ஆய்வகம், ‘இந்தியா இன்க்ளூடட் ஆன் கேம்பஸ்’ என்ற - ஒரு வழக்கு ஆய்வு சவாலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியின் மூலம், கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் (டிஇஐ)  என நிஜ உலக சுற்றியுள்ள சவால்களைச் சமாளிக்கவும், டிஇஐ ஆய்வகத்தை ஆதரிக்கும் எதிர்காலத் தலைவர்களை அடையாளம் காணவும் சிறந்த பிசினஸ் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை அழைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘இந்தியா இன்க்ளூட் ஆன் கேம்பஸ்”  என்ற முயற்சி, இந்தியாவில் உள்ள பெருநிறுவங்களில் னமிகவும் முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்றான - பணியாளர்களில் அதிக பெண்களை பணியமர்த்தல் மற்றும் தக்கவைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். வழக்கு ஆய்வு சவாலின் மூலம், மாணவர்கள் ஆழமான ஆராய்ச்சி செய்து, மிகவும் சமநிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பணியிடங்களுக்கு பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க புதுமையான மற்றும் செயல்படக்கூடிய உத்திகளை முன்மொழிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சியைப் பற்றிப் பேசிய கோத்ரெஜ் டிஇஐ ஆய்வகத்தின் தலைவரும், க்யூரிஸ்டன் இதழின் ஆசிரியருமான பர்மேஷ் ஷஹானி, “நாளைய தலைவர்கள் உள்ளடக்கம் என்பதை 'கூடுதலாக' கருதக்கூடாது, மாறாக நிறுவனங்கள் வளரவும் மற்றும் ஈடுபடவும் உள்ளடக்க்கம் என்பது ஒருங்கிணைந்தாக கருதவேண்டும். ”இந்தியா இன்க்ளூடட் ஆன் கேம்பஸ்” மூலம், நிஜ உலக டிஇஐ சவால்களுக்கு தீர்வுகளைக் கண்டறிய மாணவர்களை அழைப்பது மட்டுமல்லாமல், முதல் நாளிலிருந்தே உள்ளடக்கத்தை அவர்களின் தலைமைத்துவ டிஎன்ஏ வின் ஒரு பகுதியாக மாற்ற ஊக்குவிக்கின்றோம்” என்றார்.

ஐஐஎம் திருச்சியில் தொடங்கி, இந்தப் போட்டி எஸ்ஐபிஎம் புனே, ஐஐஎம் மும்பை மற்றும் ஐஐஎம் லக்னோவில் நடைபெறும். முதல் நான்கு இறுதிப் போட்டியாளர்கள் அக்டோபர் 8, 2025 அன்று மும்பையில் உள்ள தலைமையகத்தில் கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மூத்த தலைவர்கள் குழுவிடம் தங்கள் தீர்வுகளை வழங்குவார்கள். வெற்றி பெறும் அணிக்கு ரூ.100,000 ரொக்கப் பரிசும் குழுமத்தின் வழிகாட்டுதல் வாய்ப்புகளும் கிடைக்கும்.

கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும் அதன் டிஎன்ஏவுடன் ஒத்திசைந்து, இந்த முயற்சியின் மூலம், கோத்ரெஜ் டிஇஐ லேப் எதிர்காலத் தலைவர்களின் முடிவெடுக்கும் திறனில் பன்முகத்தன்மையை உட்பொதித்து, அதன் மூலம் இந்தியா முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form