மிச்செலின் குழுமத்தின் கேம்சோ கட்டுமான காம்பாக்ட் லைன் வணிகத்தை அதிகாரப்பூர்வமாக கையகப்படுத்தியுள்ளது சியட் லிமிடெட் நிறுவனம். இதன்மூலம், ஆஃப்-ஹைவே டயர்கள் வளர்ச்சியில் கணிசமான முன்னேற்றத்தை அடையும். இதில் இலங்கையை தளமாகக் கொண்ட மிடிகாமா ஆலை மற்றும் கொட்டுகொடாவில் உள்ள வார்ப்பு தயாரிப்பு ஆலை ஆகியவை அடங்கும்.
சியட் நிறுவனம் கேம்சோ பிராண்டை கையகப்படுத்தியது, அதிக லாபம் ஈட்டும் ஓஎச்டி பிரிவில் முன்னணி உலகளாவிய நிறுவனமாக மாறுவதற்கான அதன் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். கேம்சோவின் சிறிய கட்டுமான உபகரண டிராக்குகள் மற்றும் டயர்களில் நிபுணத்துவத்துடன், 40 க்கும் மேற்பட்ட உலகளாவிய ஓஇஎம்கள் மற்றும் பிரீமியம் சர்வதேச ஓஎச்டி விநியோகஸ்தர்களுக்கு வாய்ப்புகளைத் திறக்கிறது.
இலங்கைக்கான இந்திய உயர் கமிஷ்னர் எச்.இ சந்தோஷ் ஜா பேசுகையில், "இலங்கையில் முதலீடு செய்ததற்காக சியட் லிமிடெட் நிறுவனத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு சார்ந்த கூட்டாண்மை ஆழமடைவது இரு நாடுகளின் அராசால் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தனியார் துறை இலங்கையில் முதலீடு செய்வதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வணிக உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்". என்றார்.
சியட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அர்னாப் பானர்ஜி குறிப்பிடுகையில், "சிறிய கட்டுமான உபகரண வணிகத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் கேம்சோ பிராண்டை கையகப்படுத்துதல் ஆகியவை, நெடுஞ்சாலைக்கு வெளியே மொபிலிட்டி துறையில் சிறந்த நிறுவனமாக மாறுவதற்கான சியட் -ன் நீண்டகால தொலைநோக்கு பார்வையை முன்னேற்றுவதில் ஒரு முக்கிய படியாகும்" என்றார்.
"கேம்சோவின் பிரீமியம் பிராண்ட் மற்றும் கட்டுமான சிறிய வரிசை உற்பத்தி திறன்களை சியட் உடன் ஒருங்கிணைப்பது எங்கள் பயணத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் படியாகும்," என்று சியட் ஸ்பெஷாலிட்டியின் தலைமை நிர்வாகி அமித் டோலானி கூறினார்.