இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ்மோட்டார் நிறுவனம், வாகன வடிவமைப்பில் புதுமைகளைப் புகுத்த உதவும் ‘டிவிஎஸ் இன்டஸ்’ என்னும் தேசிய அளவிலான வருடாந்திர தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்கால தேவைகளுக்கேற்ற வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் வடிவமைப்பை உருவாக்கும் திறமைசாலிகளைஅடையாளம் காணவும்,போக்குவரத்தின் எதிர்காலத்தை மறுவரையறை செய்வதற்கும் உதவும் வருடாந்திர தளமாக ’டிவிஎஸ் இன்டஸ்’இருக்குமென டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
நவீனமயமான வடிவமைப்புகளின் மூலம் புதுமையான தயாரிப்புகளை முன்னெடுப்பதில் அக்கறை காட்டும் இந்த முயற்சியானது, ‘இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது’ என்ற நோக்கத்தைமுன்னெடுக்கும் அதே வேளையில் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ இயக்கத்தை மேலும் விரிவுபடுத்த உதவும். இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட நிலப்பரப்புகள், வாழ்க்கை முறைகள் மற்றும் மக்கள் மீது கவனம் செலுத்தும் வகையிலான அர்த்தமுள்ள வடிவமைப்புகளின் மூலம், ’டிவிஎஸ் இன்டஸ்’ இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மையமாக முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
’இன்டஸ்’, உலகின் ஆரம்பகால மற்றும் மிகவும் முன்னேறிய சமூகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து பெறப்பட்ட ஒரு சொல் ஆகும். இம்முயற்சி இந்தியாவின் வளமான வடிவமைப்பு பாரம்பரியத்தை,வளர்ச்சியை நோக்கிய ஒரு தொலைநோக்கு பார்வையுடன் ஒன்றிணைய செய்வதில் டிவிஎஸ் காட்டிவரும் அர்ப்பணிப்பை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.மிகவும் மேம்பட்ட, தொலைநோக்குள்ள மற்றும் மனிதர்களை மையமாகக் கொண்ட சிந்து சமவெளியின் பாரம்பரியத்தையும், உத்வேகத்தையும் புதுப்பிப்பதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
"வடிவமைப்பு என்பது கற்பனைக்கும், ஒரு தயாரிப்பு உருவாக்கும் நேர்மறையான தாக்கத்திற்கும் இடையிலான பாலமாகும். ‘டிவிஎஸ் இன்டஸ்’ மூலம், இந்தியாவில் இருக்கும் அடுத்த தலைமுறை வடிவமைப்பாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு ஒரு மாபெரும் தளத்தை உருவாக்குகிறோம். இந்திய போக்குவரத்தில், ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு அசல் வடிவமைப்பு துறையாக மறுவரையறை செய்ய இருக்கிறோம். இதன் மூலம் நாம் யார், முன்னேற்ற பாதையில் நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான ஒரு தளத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம்.
இந்த முயற்சி டிவிஎஸ்மோட்டார் நிறுவனத்தின் வடிவமைப்பு அடிப்படையிலான புதுமை தயாரிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து ஆகிய இரண்டிலும் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இந்த தளம் இந்திய இளைஞர்களிடையே வடிவமைப்பு மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கவும், வடிவமைப்பு துறையில் பின்னணி உள்ளவர்கள், வடிவமைப்பு துறை பின்னணிஇல்லாதவர்களிடமும் திறமைகளை வளர்த்தெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.இம்முயற்சி நம்முடைய போக்குவரத்தில் அடுத்தக்கட்ட முன்னேற்றங்களை எப்படி வடிவமைக்கப் போகிறோம் என்பதில் மட்டுமல்லாமல், எதிர்கால போக்குவரத்தில் நம்முடைய வடிவமைப்பிற்கான வரவேற்பு குறித்த உலகளாவிய உரையாடலை முன்னெடுக்கவும் உதவும்’’என்று டிவிஎஸ்மோட்டார் நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவின் துணைத் தலைவர் அமித் ராஜ்வாடே கூறுகிறார்.
மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் வடிவமைப்பு ஆர்வலர்கள் உள்ளிட்ட இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இம்முயற்சி மாபெரும் தளத்தை உருவாக்கி இருக்கிறது. ’டிவிஎஸ் இன்டஸ்’2025-ம் ஆண்டு பதிப்பு, கருப்பொருள் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தார், சஹ்யாத்ரி, கட்ச் மற்றும் மும்பை ஆகிய நான்கு தனித்துவமான பகுதிகளினால் கவரப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.இப்பகுதிகளின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகன வடிவங்களை சமர்ப்பிக்க இம்முயற்சியில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த மாபெரும் சவாலின் முன்பதிவு, அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும் தங்களது வடிவமைப்பைசமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 06, 2025 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்புத் துறை மற்றும் போக்குவரத்து துறையில் மிகப்பிரபலமாக இருக்கும் முன்னணி நிபுணர்கள் அடங்கிய நடுவர் குழுவினால், சமர்ப்பிக்கப்பட்ட வடிவமைபப்புகள் மதிப்பீடு செய்யப்படும். மதிப்பிடும் அளவுகோல்களில் அசலான வடிவமைப்புத்தன்மை, பயன்படும் சூழலுக்கு ஏற்றவாறு இருக்கும் பொருத்தம், பயன்படுத்துபவர்களை மையமாக கொண்ட வடிவமைப்பு அம்சங்கள் மற்றும் எளிதில் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு ஆகிய அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். முதல் மூன்று வெற்றியாளர்கள் ரூ.5 லட்சம் வரை ரொக்கப் பரிசுகளைப் பெறுவார்கள். மேலும் பார்வையாளர்களின் தேர்வு விருது மூலம் கூடுதல் அங்கீகாரம் அளிக்கும் வகையில் திறமை அடையாளம் காணப்படும். இத்துடன் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில்வடிவமைப்புக் குழுவுடன் பயிற்சிப் பெறும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் அளிக்கப்படும்.
இந்த முயற்சியில் பங்கேற்பவர்கள் www.tvsindus.com என்ற முகவரியில் உள்ள டிவிஎஸ் இன்டஸ்-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் தங்கள் வடிவமைப்புகள் குறித்து பதிவுசெய்து சமர்ப்பிக்கலாம். இந்தப் போட்டியில் பங்கேற்க அனுமதி இலவசம். இவ்வாய்ப்பு தனிநபர் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே. மேலும் எந்த கல்விப் பிரிவில் இருந்தாலும் சரி, அனைவரும் கலந்து கொண்டு தங்களது வடிவமைப்பு மாதிரியை சமர்ப்பிக்கலாம். மாபெரும் தளமாக அறிமுகப்படுத்தப்படும் டிவிஎஸ் இன்டஸ் மூலம், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், வடிவமைப்பு அடிப்படையிலான புதிய தயாரிப்புகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து தீர்வுகளில் கொண்டிருக்கும் தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. அதே நேரத்தில் வடிவமைப்புகளுக்கான உலகளாவிய மேடையில் வழிநடத்தத் தயாராக இருக்கும் புதிய தலைமுறை இந்திய படைப்பாளிகளை வளர்த்தெடுக்கவும் அக்கறையுடன் இருக்கிறது.