மொபைல் தொழில் நுட்பத்தில் ஒரு உலகளாவிய முன்னோடியும், இந்தியாவின் முன்னணி AI ஸ்மார்ட்போன் பிராண்டுமான மோட்டோரோலா, இவ்வாண்டின் ஜி-சீரீஸில் முதலாவது ஸ்மார்ட்போன் மற்றும் ரூ.20,000-க்கு கீழான, கடந்த ஆண்டின் பெஸ்ட் - செல்லிங் ஸ்மார்ட்போன் ஆன மோடோ ஜி85 5ஜிக்குஉண்மையான வாரிசான மோடோ ஜு96 5ஜி ஐ அறிமுகப்படுத்தியது.
ரூ.20,000-க்கு கீழான பிரிவை மறுவரையறை செய்யும் இந்த ஸ்மார்போனின் முன்னணி அம்சங்களில், இப்பிரிவின் சிறந்த ஐபி68 அன்டர்வாட்டர் பாதுகாப்புடன் 144 எச்இசட் 3டி கர்வ்டு போலெட் ஃபுல்எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, மோடோ ஏஐயால் திறனூட்டப்பட்ட ஒரு சிக்மென்ட் பெஸ்ட் 50 எம்பி ஐஓஎஸ் சோனி லைடியா 700சி கேமரா மற்றும் அனைத்து லென்ஸ்களிலிருந்தும் 4கே வீடியோ பதிவு, மற்றும் 650கே வரையிலான ஒரு அன்டூட் uஸ்கோருடன் சிக்மென்ட் லீடிங் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 பிராசஸர் உள்ளிட்டவைகள் அடங்கும். மேலும், இது மெல்லிய மற்றும் எடை குறைந்த ஒரு பிரீமியம் வேகன் லெதர் டிசைன்ஐ பெருமையுடன் கொண்டுள்ளது. இது 42 மணி நேர ரன் டைம்ஐ வழங்கும் ஒரு 5500 எம்ஏஎச் பேட்டரியுடன் நான்கு பான்டோன் கியூரேட்டேடு வண்ணங்களில் கிடைக்கிறது மற்றும் இந்த மோடோ ஜி95 5ஜி ஆனது, இன்-பில்ட் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்ஐக் கொண்டுள்ளது. மேலும் ஆரம்ப விலையாக வெறும் ரூ.17,999 விலையில் (8+128ஜிபி வேரியண்ட்) கிடைக்கிறது.
மோடோ ஜி96 5ஜி ஆனது, ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் முதல்முறையாக இணைக்கப்பட்டுள்ள ஐபி 68 அன்டர்வாட்டர் பாதுகாப்புடன், இப்பிரிவின் முன்னணி அம்சமான டிஸ்ப்ளே - உடன் இப்பிரிவின் ஒரு புதிய பெஞ்ச்மார்க்-ஆக அமைக்கிறது. இந்த 6.67 இஞ்ச் முழு எச்டி போலெட் டிஸ்ப்ளே ஆனது, நவீன டிஸ்ப்ளே கலர் புஸ்ட் டெக்னாலஜி, 10-பிட் கலர் டெப்த் மற்றும் நேரில் காண்பதைப் போன்ற காட்சிகளுக்காக 100 சதவீதம் டிசிஐ பி3 கலர் காமட் ஆகியவற்றுடன் ஒரு பிரகாசமான, தெளிவான மற்றும் முழுமையாக ஈர்க்கக்கூடிய ஒரு பார்வை அனுபவத்தை வழங்குகிறது. 1600 நிட்ஸ் என்ற ஒரு உச்ச பிரகாசத்துடன், இந்த ஸ்கிரீன் ஆனது பலவித ஒளி சூழல்களுக்கு ஏற்ப சுலபமாக அனுசரிக்கும் அதே நேரத்தில், பவர் திறனை சிறந்த முறையில் பராமரிக்கிறது. இந்த 3டி கர்வ்டு எண்ட்லெஸ்-எட்ஜ் டிசைன் ஆனது பொழுதுபோக்கு அனுபவத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.
மேலும், ஸ்மார்ட் கனெக்ட் 2.0 உடன், டிவிக்கள்அல்லது பிசிக்களுடன் வயர்லெஸ் முறையில் இணைத்து கேமிங், வீடியோ அழைப்புகள் மற்றும் பலவற்றைச் செய்ய அனுமதிப்பதன் மூலம், ஒரு சக்தி வாய்ந்த மென்பொருள் அனுபவத்தை வழங்குகிறது. கிராஸ் டிவைஸ் செர்ச், ஸ்வைப் டு ஷேர் மற்றும் ஸ்வைப் டு ஸ்ட்ரீம் போன்ற அம்சங்கள், தடையற்ற மல்டி டாஸ்கிங்-ஐ இயலச் செய்கின்றன. பாதுகாப்பு என்பது, திங் ஷீல்டு ஆல் திறனூட்டப்பட்ட மோட்டோ செக்யூர் 3.0 உடன் வழங்கப்படும் அதே வேளையில், ஃபேமிலி ஸ்பேசஸ் 3.0ஆனது, ஸ்கிரீன் டைம் மேலாண்மை மற்றும் ரிமோட் உதவியை வழங்குகிறது. ஹலோ யுஐ (ஆண்ட்ராய்டு 15)இல் இயங்கும் இந்த சாதனம், 1 வருட ஓஎஸ் அப்கிரேடுகள் மற்றும் 3 வருடங்கள் செக்யூரிட்டி அப்டேட்கள் ஆகியவற்றிற்கான உத்தரவாதம் ஒரு தடையற்ற மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை உறுதிசெய்கிறது.
கிடைக்கும்தன்மை:
இந்த ஸ்மார்ட்போன் ஆனது, 8ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் (விலை ரூ.17999) மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் (விலை ரூ.19999) ஆகிய இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும். மேலும், இது ஆஷ்லே நீலம், கிரீனர் பாஸ்சர்ஸ், கேட்லியா ஆர்க்கிட் மற்றும் டிரெஸ்டன் ப்ளூ ஆகிய நான்கு பிரமிப்பூட்டும் பான்டோன் கியூரேட்டேடு நிறங்களில் வரும். இதன் விற்பனையானது ஜூலை16ம்தேதி மதியம் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட், மோடோரோலா டாட் இன் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் உட்பட இந்தியாவின் முன்னணி ரீட்டெயில் ஸ்டோர்களில் தொடங்குகிறது.