ஓப்போ இந்தியா தனது பிரிவில் மிகவும் வலுவான 5ஜி ஸ்மார்ட்போன் ஆன ஓப்போ கே13 எக்ஸ் 5ஜி -ஐ அறிமுகப்படுத்தியுள்ளது - குறிப்பாக நீடித்து உழைக்கும் தன்மை, சமரசம் இல்லாமல் அனைத்து வகையான செயல்பாடுகளையும் கோரும் இளம் மாணவர்கள், ஆரம்பகால நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மீள்தன்மைக்காக வடிவமைக்கப்பட்ட கே13 எக்ஸ் 5ஜி, எஸ்ஜிஎஸ் கோல்ட் டிராப் சான்றிதழ் மற்றும் மில் எஸ்டிடி 810 எச் இராணுவத்-தர தரங்களுடன் வருகிறது, இது அதன் வகையில் மிகவும் வலுவான சாதனமாக அமைகிறது. அதன் 360 டிகிரி டேமேஜ் ப்ரூப் அர்மோர் பாடி, ஏரோஸ்பேஸ் கிரேட் ஏஎம்04 அலுமினியம் அலாய் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது.
கிரிஸ்டல் ஷீல்ட் க்ளாஸால் வலுவூட்டப்பட்டுள்ளது, அத்துடன் ஆழ்கடல் ஸ்பாஞ்ச்களால் ஈர்க்கப்பட்ட பனோமெட்டிக் ஸ்பாஞ்ச் ஷாக் அப்சர்சன் சிஸ்டத்தால் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஓப்போ கே13 எக்ஸ் 5ஜி, நீடித்து உழைக்கும் தன்மைக்கு ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது, ஸ்டைல் அல்லது பயன்பாட்டில் சமரசம் செய்யாமல் ஒப்பிடமுடியாத கடினத்தன்மையை வழங்குகிறது.
4ஜிபி + 128 ஜிபி வகைக்கு ரூ.11,999 விலையிலும், 6ஜிபி+128ஜிபி வகைக்கு ரூ.12,999 விலையிலும், 8ஜிபி+128ஜிபி வகைக்கு ரூ.14,999 விலையிலும் ஓப்போ கே13 எக்ஸ் 5ஜி, 2025 ஜூன் 27 முதல் ஓப்போ இ-ஸ்டோர் மற்றும் ப்ளிப்கார்ட்டில் நண்பகல்12 மணி முதல் இரண்டு வண்ண விருப்பங்களில்கிடைக்கும். மிட்நைட் வைலட், மற்றும் சன்செட் பீச் ஆகிய நிறங்களில் வாங்கக் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் நுகர்வோர், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சலுகைகளுடன் அல்லது ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கூடுதலாக 3 மாத விலையில்லா ஈஎம்ஐ விருப்பத்துடன், விற்பனை நாளில் மட்டும் 4ஜிபி மற்றும் 6 ஜிபி வகைகளில் ரூ.1,000 உடனடி தள்ளுபடியையும், 8 ஜிபி வகைகளில்ரூ.2,000 உடனடி தள்ளுபடியையும் பெறலாம், இதன் நடைமுறை விலை முறையே ரூ.10,999 ரூ.11,999, ரூ.12,999ஆகும்.
6.67 இஞ்ச் எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்பிளே, ஏஐ என்ஹான்ஸ் கிளாரிட்டி, ஏஐ ரிப்ளக்ஷன் ரிமூவர், ஏஐ எரைசர், ஏஐ ரைட்டர், ஏஐ ரெக்கார்டர், ஏஐ ஸ்மார் இமேஜ் மேட்டிங் 2.0 உள்ளிட்டவை இந்த போனின் சிறப்பம்சங்களாகும். 50 எம்பி மற்றும் 2 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, 5.4 ப்ளுடூத், கலர் ஓஎஸ் 15 ஆண்ட்ராய்டு, 2 ஆண்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் உள்ள்ளிட்ட சிறப்பம்சங்களும் உள்ளன.
ஓப்போ இந்தியாவின் தயாரிப்பு தொடர்புத் தலைவர் சவியோ டி'சோசா கூறுகையில், "ஓப்போ கே13 எக்ஸ் 5ஜி மூலம், ஜின் இசட்டின் நிஜ உலகத் தேவைகளுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்: தனிச்சிறப்புமிக்க நீடித்துழைப்பு, புளுயிட் செயல்திறன் மற்றும் அறிவார்ந்த சக்தி திறன் - இவை அனைத்தும் சிறந்த மதிப்பில். கே 13 எக்ஸ் ஒரு அதிநவீன பயோமிமெடிக் அதிர்ச்சி உறிஞ்சுதல் அமைப்பு, இவ்வகையில் - முன்னணி பேட்டரி ஆப்டிமேஷன், 5ஜி தயார்நிலை ஆகியவற்றைக் கொண்டுள்ளது; இந்த ஸ்மார்ட்போன் ஓப்போவின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. சமரசம் இல்லாமல் ஒரு தொடக்க நிலை ஸ்மார்ட்போனில் என்ன சாத்தியம் என்பதை மறுவரையறை செய்கிறது" என்றார்.
ஃபிளிப்கார்ட் மொபைல்ஸ் துணைத் தலைவர் ஸ்மிருதி ரவிச்சந்திரன் கூறுகையில், "பிளிப்கார்ட்டில் வலுவான செயல்திறனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையின் தேவைகளையும் தாங்கும் ஸ்மார்ட்போன்களுக்கான தேவை அதிகரித்து வருவதை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம். ஓப்போ கே13 எக்ஸ் 5ஜி-இன் அறிமுகம், நீடித்து உழைக்கும் தன்மைக்கான வளர்ந்து வரும் நுகர்வோர் தேவையை சமரசம் இல்லாமல் நிவர்த்தி செய்கிறது. அதன் இராணுவத் தர கடினத்தன்மை, புதுமையான அதிர்ச்சி உறிஞ்சுதல் அமைப்பு, நன்கு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன், கே13 எக்ஸ் 5ஜி மதிப்பு, ஸ்டைல் மற்றும் மீள்தன்மையைத் தேடும் இளம் பயனர்களுக்கு ஒரு கட்டாயத் தேர்வாகும். இந்த சக்திவாய்ந்த, நீடித்துழைக்கும் சாதனத்தை இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வர ஓப்போவுடன் மீண்டும் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.