பஜாஜ் ஃபின்சர்வ் ஏஎம்சி 'பஜாஜ் ஃபின்சர்வ் கன்சம்ப்சன் நிதி’த் திட்டத்தை அறிமுகம் செய்கிறது.



பஜாஜ் ஃபின்சர்வ் ஏஎம்சி ஆனது, நுகர்வுக் கோட்பாட்டைத் தொடரும் திறந்த நிலைப் பங்குத் திட்டமான பஜாஜ் ஃபின்சர்வ் கன்சம்ப்சன் நிதித் திட்டத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிதித் திட்டம் 8 நவம்பர் 2024 அன்று  ஸப்ஸ்கிரிப்ஷனுக்காகத் திறக்கப்படும் மற்றும் 22 நவம்பர் 2024 அன்று முடிவடைகிறது.

உள்நாட்டு நுகர்வுத் தேவையிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயனடையக் கூடிய நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முக்கியமாக நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் மூலம் இந்த நிதியானது செல்வத்தை உருவாக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.  பங்கு முதலீடுகளுக்கான மூத்த நிதி மேலாளர் சோர்ப் குப்தா மற்றும் கடன் முதலீடுகளுக்கான மூத்த நிதி மேலாளர் சித்தார்த் சவுத்ரி ஆகியோருடன் பஜாஜ் ஃபின்சர்வ் ஏஎம்சி சிஐஒ நிமேஷ் சந்தனால் இந்த நிதி நிர்வகிக்கப்படும்.

பஜாஜ் ஃபின்சர்வ் நுகர்வு நிதி என்பது ஒரு உண்மைத்தன்மையுடைய   நிதித் திட்டமாகும், இது வளர்ந்து வரும் நுகர்வு மெகா ட்ரெண்டுகளுடன் இணைந்த துறைகளில் வியூகரீதியாக முதலீடு செய்யும்.  எஃப்எம்சிஜி ஆட்டோமொபைல்,  நீண்ட காலம் நிலைக்கும் நுகர்வோர் பொருட்கள், மருத்துவ சேவை, ரியல் எஸ்டேட், டெலிகாம், மின்சாரம் மற்றும் சேவைகள் போன்ற இந்தியாவின் விரைவான கன்சம்சன் வளர்ச்சிக்கு மென்மேலும் அதிகமாகப் பங்களித்து வரும் துறைகளில் வாய்ப்புகளை அடையாளம் காண்பதை இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது. 

சாத்தியமான வளர்ச்சிகளை அடையாளம் காண்பதன் மூலம் வளர்ந்து வரும் நுகர்வோர் பெருக்கத்தால் பயன் பெறும் இடத்தில் உள்ள நிறுவனங்களில் இந்த நிதி கவனம் செலுத்தும்.  இந்தத் திட்டம் நிஃப்டி இந்தியா நுகர்வு மொத்த வருவாய்க் குறியீட்டுக்கு எதிராகத் தரப்படுத்தப்படும். லம்சம் மற்றும் முறையான முதலீட்டுத் திட்டத்திற்குக் குறைந்த பட்ச முதலீட்டுத் தொகை ₹500 ஆகும். ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் முதலீடு திரும்பப் பெறப் பட்டால், 1 சதவிதம் வெளியேறும் கட்டணம் விதிக்கப் படும்.

இதன் அறிமுகத்தில் பேசுகையில், பஜாஜ் ஃபின்சர்வ் ஏஎம்சி-யின் சிஇஒ கணேஷ் மோகன், "நுகர்வை ஒரு கோட்பாடாகக் கொள்வது இப்போது முதலீட்டுக்கு சாதகமானதாக உள்ளது, ஏனெனில் அதன் அடிப்படைகள் பரந்த சந்தைகளை ஒப்பிடும் போது வலிமையானவையாக உள்ளன. வரும் ஆண்டுகளில் எஃப்எம்சிஜி உணவுச் சேவைகள் மற்றும் விரைவு வர்த்தகம், ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் குறிப்பிடத் தக்க வளர்ச்சி காணப்படும் என்பதால், இந்த நிதி நீண்டகாலத்தில் எங்கள் முதலீட்டாளர்களின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவுக்கு ஒரு மதிப்பு மிக்க சொத்தாக இருக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்றார்.

நிமேஷ் சந்தன், தலைமை முதலீட்டு அதிகாரி, பஜாஜ் ஃபின்சர்வ் ஏஎம்சி கூறுகையில் "பஜாஜ் ஃபின்சர்வ் கன்சம்சன் (நுகர்வு) நிதித் திட்டமானது  மெகா ட்ரெண்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், பல்வேறு துறைகளில் இந்த நாட்டில் உள்நாட்டு தேவையின் வளர்ச்சியிலிருந்து முதலீட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கவும் நன்கு நிலை நிறுத்தப் பட்டுள்ளது. எங்கள் இன்க்யூப் தத்துவம் மற்றும் ஈக்விட்டி ஆராய்ச்சி செயல்முறை முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் திறன் கொண்ட நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதில் எங்களுக்கு வழிகாட்டும்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form