இந்தியாவின் முன்னணி ஸ்கூல் எட்டெக் நிறுவனமான லீட், இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தற்போதைய நிலையை ஆராய்கிற ‘தி பல்ஸ் ஆஃப் ஸ்கூல் லீடர்ஸ் சர்வே’ 'பள்ளித்தலைவர்களிடையே காணப்படும் வேறுபாடு பற்றிய கணக்கெடுப்பு' என்ற ஒரு புதிய ஆய்வை வெளியிட்டுள்ளது. அதன் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளில், பாடப்புத்தகங்கள் போன்ற வழக்கமான முறைகளை மட்டுமே பயன்படுத்தும் பள்ளிகளை விட தங்கள் மாணவர்களுக்கு பன் மாதிரி கல்வியை வழங்கும் பள்ளிகள் தங்களை உயர்வாக மதிப்பிடுகின்றன.
இந்த நாடு தழுவிய ஆய்வானது, சுமார் 1.7 லட்சம் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 500 க்கும் அதிகமான தனியார் பள்ளிகளின் மதிப்பீடுகளின் அடிப்படையில் இருந்தது. கருத்தியல் புரிதல், நம்பிக்கை, ஆங்கிலம் பேசுதல் மற்றும் கல்வியின் ஒட்டுமொத்தத் தரம் ஆகிய நான்கு அத்தியாவசியமான மாணவர் கற்றல் விளைவுகளின் அடிப்படையில் பள்ளிகள் தங்களை மதிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன.
பெரும்பாலான பள்ளிகள் கருத்தியல் புரிதல் மற்றும் ஒட்டுமொத்த தரத்தில் தங்களை உயர்வாக மதிப்பிட்டாலும், மாணவர்களின் நம்பிக்கை அளவு மற்றும் ஆங்கிலம் பேசும் திறன் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தன. மேலும், மாணவர்களிடையே குறைவான கற்றல் முடிவுகள் மற்றும் பள்ளியை வேறுபடுத்துவதில் சிரமம் ஆகியவை தமிழ்நாட்டில் பள்ளித் தலைவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக இருக்கின்றன.
பாடப்புத்தகங்கள் போன்ற வழக்கமான முறைகளை மட்டுமே பயன்படுத்துகிற பள்ளிகளுக்கு எதிராக, லீட் போன்ற ஒருங்கிணைந்த அமைப்புகளைப் பயன்படுத்தும் பள்ளிகளின் செயல்திறனில் ஒரு தெளிவான வேறுபாட்டை இந்த கணக்கெடுப்பு காட்டுகிறது. ஒருங்கிணைந்த அமைப்புகள், பாடப்புத்தகங்கள், வீடியோக்கள் மற்றும் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு கற்றல் முறைகளை அவற்றின் பாடத் திட்டங்களில் இணைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருங்கிணைந்த அமைப்புகளைப் பயன்படுத்தும் 93 சதவித பள்ளிகள், மற்ற பள்ளிகளின் 85 சதவிதம் உடன் மட்டுமே ஒப்பிடும்போது, கணிதம் மற்றும் அறிவியல் ஆகியவற்றின் கருத்தியல் புரிதலில் தங்கள் மாணவர்கள் சிறந்து விளங்குவதாக கருதுகிறார்கள். ஒருங்கிணைந்த அமைப்புகளைப் பயன்படுத்தும் பள்ளித் தலைவர்களில் 87 சதவிதம் பேர் தங்கள் மாணவர்களிடம் நல்ல நம்பிக்கை அளவை தெரிவிக்கும்போது மற்ற பள்ளிகளில் 78 சதவிதம் மட்டுமே இதை தெரிவிக்கின்றனர்.
மற்ற பள்ளிகளில் 73 சதவிதம் பேருடன் ஒப்பிடும்போது, ஒருங்கிணைந்த அமைப்புகள் மூலம் பண் மாதிரி கற்றலை வழங்குகிற பள்ளித் தலைவர்களில் 79 சதவிதம் பேர் தங்கள் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை எளிதாக உணர்வதாகத் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான பள்ளிகள் தங்கள் கல்வியின் தரம் நன்றாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒருங்கிணைந்த அமைப்புகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பள்ளித் தலைவரும் தங்கள் மாணவர்களின் அதிக நம்பிக்கை அளவைத் தெரிவிக்கின்ற அதே நேரத்தில் மற்ற பள்ளிகளில் 83 சதவிதம் பேர் மட்டுமே இந்த அளவைத் தெரிவிக்கின்றனர்.
லீட் குழுமத்தின் 'தி பல்ஸ் ஆஃப் ஸ்கூல் லீடர்ஸ் சர்வே' இன் படி, ஒருங்கிணைந்த அமைப்புகளைப் பயன்படுத்தும் முதல்வர்கள் மற்றும் பள்ளி உரிமையாளர்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் செயல்பாட்டுக் கருவிகள், மையப்படுத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் மற்றும் இஎல்ஜிஏ (ஆங்கிலத்தை ஒரு திறனாகக் கற்பிக்கும் லீட் நிறுவனத்தின் தனித்துவமான திட்டம்) மற்றும் குறியீட்டு முறை போன்ற பாடத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க புதுமைகளை உருவாக்குகின்றதன் முலம் பன் மாதிரி கற்றலுக்கான மேற்கூறிய மாணவர் மாற்றத்திற்குக் காரணமாக இருக்கின்றனர்.
பள்ளிகள் எதிர்கொள்ளும் அபிலாஷைகள் மற்றும் சவால்கள் குறித்தும் இந்த கணக்கெடுப்பு ஆய்வு செய்தது. பள்ளிகளின் இந்த முதன்மையான விருப்பம், கல்வியில் சிறந்து விளங்குவதற்காக அறியப்படுவதாக இருக்கிறது மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை தெளிவாகக் குறிக்கின்ற வகையில் இரண்டாவது மிக உயர்ந்த விருப்பம் தொழில்நுட்ப ஆர்வலராக இருப்பதை நோக்கியதாக இருக்கிறது. பள்ளிகள் எதிர்கொள்ளும் முதல் இரண்டு சவால்கள், போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாமை மற்றும் மாணவர்களின் குறைந்த கற்றல் திறன் ஆகியவையாகும்.
இந்த கருத்துக்கணிப்புக்கு பதிலளித்த லீட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான சுமீத் மேத்தா, “பள்ளிகளின் அபிலாஷைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எது செயல்படுகிறது மற்றும் எதை மாற்ற வேண்டும் என்பதை அறிவது முக்கியமானதாக இருக்கிறது. நாங்கள் பன்-மாதிரி கற்றல் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிகாரம் அளிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து வருகிறோம். நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் 21 ஆம் நூற்றாண்டில் அவர்கள் சிறந்து விளங்கத் தேவையான திறன்கள் மற்றும் அறிவை அவர்களுக்கு வழங்குகின்ற உலகத் தரம் வாய்ந்த கல்வியை அணுகக்கூடியதாக மாற்றுவது எங்கள் குறிக்கோளாக இருக்கிறது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் எங்கள் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகின்றன” என்றார்.