கோடக் லைப் இன்சூரன்ஸின் புதிய காப்பீட்டுத் திட்டம்

 

கோடக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் புதிதாக கோடக் ஜென்2ஜென் புரொடெக்ட் எனும் புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. காப்பீட்டுத் துறையில் முதல் முறையாக இரண்டு தலைமுறைனரைக் காக்கும் வகையில் இது அறிமுகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, ஒரே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உங்கள் வாரிசுகளுக்கும் காப்பீட்டுவசதி கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.

உங்கள் வாரிசுதாரருக்கு 100% உத்திரவாதமான பிரீமியம் சலுகைகள் கிடைக்கும் வகையில் கோடக் ஜென்2ஜென் புரொடெக்ட் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. குழந்தைகளுக்கு காப்பீடு வசதியை நெகிழ்வுத் தன்மையுடன் தேர்வு செய்யும் வாய்ப்பும் உள்ளது. பெற்றோர் (பிரதான ஆயுள் காப்பீடு பெற்றவர்) 60 வயது அல்லது 65 வயதை எட்டும்போது இந்த வசதியைப் பெறலாம். கூடுதலாக உங்கள் பிள்ளை 60 வயதை எட்டும் வரையில் காப்பீட்டுச் செலுகையைத் தொடர்ந்து பெற முடியும்.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒருங்கிணைந்த கவரேஜ், அதாவது உடல்நலன் சார்ந்த சலுகைகள் மற்றும் பயனாளிகள் விபத்துக் காப்பீட்டுச் சலுகை, நிரந்தர  ஊனத்துக்கான சலுகை மற்றும்  தீரா நோய் உள்ளிட்ட சலுகைகளைப் பெறலாம். பெண் காப்பீட்டுத்தாரருக்கு கூடுதலாக கோடக் ஜென்2ஜென் புரொடெக்ட் திட்டத்தில் 5% விபத்து சலுகை அளிக்கப்படும்.

இந்தக் காப்பீட்டுத் திட்டம் குறித்து கோடக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மகேஷ் பாலசுப்ரமணியன் கூறுகையில், "வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் மீறிய காப்பீட்டுத் திட்டங்களை மிகுந்த பொறுப்புடன் வடிவமைப்பதில் எங்கள் நிறுவனம் அக்கறை செலுத்துகிறது. 'கோடக் ஜென்2ஜென் புரொடெக்ட்' காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரே திட்டத்தில் இரண்டு தலைமுறையினருக்கான காப்பீட்டு வசதிகளைப் பெற முடியும். இந்திய பாரம்பரியத்தில் கூட்டுக் குடும்பம் மிகுந்த பிணைப்புடனும், வலுவுடனும் திகழ்கிறது. முந்தைய தலைமுறையினர் தங்களுக்குப் பிறகு தங்களது வாரிசுகளுக்கும் பலன் கிடைக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். இந்திய பாரம்பரிய கலாசாரத்தையும், குடும்ப பிணைப்பையும் இணைக்கும் வகையில் இந்தக் காப்பீட்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய புத்தாக்க காப்பீட்டுத் திட்டமான 'கோடக் ஜென்2ஜென் புரொடெக்ட் திட்டமானது இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனைவருக்கும் காப்பீடு 2047 என்ற இலக்கை எட்டுவதில் கணிசமான பங்களிப்பை அளிக்கும்" என்று குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form