தேர்வுத் தயாரிப்பு சேவைகளில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் 4 மதுரை மாணவர்கள் மதிப்புமிக்க நீட் யுஜி 2024 தேர்வில் 685க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது.உலகளவில் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் நீட் தேர்வுக்குத் தயாராவதற்காக ஏஇஎஸ்எல் வகுப்பறைத் திட்டத்தில் மாணவர்கள் சேர்ந்தனர். கருத்தாக்கங்களைப் பற்றிய அவர்களின் கடுமையான புரிதல் மற்றும் ஒழுக்கமான படிப்பு அட்டவணையை கடைபிடித்ததே அவர்களின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு காரணம்.
ராக்கேஷ் கண்ணன் பி 706 மதிப்பெண்ணுடன் அகில இந்திய தரவரிசைப்பட்டியலில் 774வது இடம், ஆர் கே குருப்ரீத் 705 மதிப்பெண்களுடன் அகில இந்திய தரவரிசைப்பட்டியலில் 1089வது இடம், ஹரீஷ் ஜி695 மதிப்பெண்களுடன் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 2882வது இடம், ஸ்ரீநிரஞ்சனா 690 மதிப்பெண்களுடன் அகில இந்திய தரவரிசைப்பட்டியலில் 4264வது இடம், கே மோகனிஷ் 685 மதிப்பெண்களுடன் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 6473வது இடம் மற்றும் வி.எஸ் ப்ரணவ் 785 மதிப்பெண்களுடன் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 7045வது இடத்தைப் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து பேசிய மாணவர்கள், "உள்ளடக்கம் மற்றும் பயிற்சி என இரண்டிலும் எங்களுக்கு உதவிய ஆகாஷிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஏஇஎஸ்எல்-ன் உதவி இல்லாமல் குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துகளை நாங்கள் புரிந்துகொண்டிருக்க மாட்டோம்” என்றனர்.
மாணவர்களின் சாதனையைப் பாராட்டி பேசிய ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் முதன்மை கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ் குமார் மிஸ்ரா கூறுகையில், "மாணவர்களின் முன்மாதிரியான சாதனையை நாங்கள் வாழ்த்துகிறோம். நீட் 2024 தேர்வு எழுத 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் சாதனையானது அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் பெற்றோரின் ஆதரவை பறைசாற்றுகிறது. எங்கள் மாணவர்களின் வருங்கால முயற்சிகள் வெற்றிபெற எங்களின் வாழ்த்துக்கள்” என்றார்.