தி அவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா அயோத்தியின் ஒளியை உலகம் முழுவதும் பரப்புகிறது



துபாய், நியூயார்க், டெல்லி என்சிஆர் ஆகிய புகழ்பெற்ற இடங்களில் தொடர்ச்சியான பிரமாண்ட நிகழ்வுகளுடன், எச்ஓஏபிஎல் அயோத்தியின் மகத்தான திறனை வெளிப்படுத்தியது. இத்தேசிய பெருமையின் சின்னம், அயோத்தியின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தில் உலகளாவிய பங்கேற்பை அழைத்தது. இந்நிகழ்வுகள், புலம்பெயர்ந்த இந்தியர்களை அவர்களின் பாரம்பரியத்துடன் இணைப்பதன் முக்கியத்துவத்தையும், அயோத்தியை உலகளாவிய ஆன்மீகத் தலைநகராக நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. 

அயோத்தியின் வளமான பாரம்பரியத்தை புகழ்பெற்ற இடங்களில் வழங்குவதன் மூலம், ஏச்ஓஏபிஎல் இந்நகரத்தின் முக்கியத்துவத்தையும் வளர்ச்சித் திறனையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த ஆண்டு 2024 ஜனவரியில், அமிதாப் பச்சன், தி ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதாவின் 7-ஸ்டார் பிராண்டட் நில மேம்பாட்டுத் திட்டமான தி சரயு-இல் நிலத்தை வாங்கினார்.

இந்நிகழ்வின் சிறப்பம்சங்கள், உலகின் மிகப்பெரிய பிரேம் ஆன துபாய் பிரேமில் 150 மீட்டர் உயரத்தில் நிற்கும் காட்சியை உள்ளடக்கியது. துபாய் பிரேம் என்பது துபாயின் மிகச்சிறந்த கட்டமைப்புகளில் ஒன்றாகும், மேலும் இது கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே ஒரு பாலத்தை குறிக்கிறது, எனவே, இது அயோத்தியின் பாரம்பரியத்தை மதிக்க ஒரு பொருத்தமான இடமாக இருந்தது. அதே நேரத்தில் அதன் எதிர்காலத்தை ஒரு அதிவேக பெரிதாக்கப்பட்ட ரியாலிட்டி காட்சி மூலம், நியூயார்க் நகர டைம்ஸ் சதுக்கத்தில், ஒரு வீடியோ காட்சி, வாடிக்கையாளர் பங்குபெறும் நிகழ்வு ஆகியவை அயோத்தியின் பாரம்பரியத்தை நியூயார்க் நகரத்தின் மையத்திற்கு கொண்டு வந்தன.

இது உலகளாவிய பார்வையாளர்களை அயோத்தியின் சிறப்போடு இணைக்கிறது. அத்துடன், ஒரு கண்கவர் ட்ரோன்-ஷோ டெல்லி என்சிஆர் வானத்தை ஒளிரச் செய்தது, அயோத்தியின் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டாடுவது, புதுமையின வளர்ச்சியையும் பாரம்பரியத்தையும் காட்சிப்படுத்துகிறது.

தி அவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா தலைவர் அபிநந்தன் லோதா கூறுகையில், "அயோத்தியாஜியின் பெருமையை உலக அரங்கில் காட்சிப்படுத்துவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். அயோத்தியாஜியின் பாரம்பரியத்தையும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் உலகின் புகழ்பெற்ற இடங்களில் காட்சிப்படுத்துவதன் மூலம் புலம்பெயர்ந்த இந்தியர்களை அவர்களின் வேர்களுடன் நாங்கள் இணைக்கிறோம். இந்த உலகளாவிய அறிமுகமானது இந்திய புலம்பெயர்ந்தோர் வாங்குவதற்கான மற்றொரு வாய்ப்பாகும்,. அயோத்தியை உலகளாவிய ஆன்மீக தலைநகராக அதன் சரியான இடத்திற்கு உயர்த்துவதே எங்கள் நோக்கம், மேலும் இன்று, அந்த திசையில் நாங்கள் ஒரு குறிப்பிடத்தக்க படியை எடுத்துள்ளோம்” என்றார்.

 தி சரயு-இல் தனது முதலீடு பற்றி அமிதாப் பச்சன் பேசுகையில், " தி ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதாவுடன் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருக்கும் நகரமான அயோத்தியில் உள்ள சரயுவுக்காக இந்தப் பயணத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அயோத்தியின் காலத்தால் அழியாத ஆன்மீகம், பண்பாட்டு செழுமை ஆகியவை புவியியல் எல்லைகளைத் தாண்டிய உணர்வுபூர்வமான தொடர்பை உருவாக்கியுள்ளன. உலகளாவிய ஆன்மீகத் தலைநகரில் எனது வீட்டைக் கட்ட ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form