ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லேவியா ரக கார்களுக்கு ஆறு எர்பேக் பாதுகாப்புஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம்,குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் அனைத்து ரகங்களிலும் ஆறு ஏர்பேக்குகளை அறிமுகப்படுத்திப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளது. இது  நிறுவனத்தின் எம்ஒய்24 அப்டேட்களின் ஒரு பகுதியாகும். குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் எம்ஒய்24 ரக மேம்பாடுகள், ஸ்கோடா ஏற்கனவே 2024- 4ஆம் காலாண்டில்அறிமுகப்படுத்திய அப்டேகளுக்குக் கூடுதல் அறிமுகங்களாகும். 

இந்த அப்டேட்கள் ஸ்கோடா ஆட்டோ இந்தியா 2024 தயாரிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது.  2025இல் இந்தியாவில் உலகளவில் அறிமுகமாகும் அனைத்து புத்தம் புதிய காம்பேக்ட எஸ்யூவி அறிமுகம் குறிப்பிடத்தக்கது. மேலும், வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களின் ஆடம்பர தேவையை நிறைவு செய்ய, லிமிடெட் எண்ணிக்கையில், மீள் அறிமுகமாகயிருக்கும் சூப்பர்ப் தொடர்பான அறிவிப்பும் முக்கியமானது.

குஷாக் மற்றும் ஸ்லேவியா இரண்டுமே நிரூபிக்கப்பட்ட, ஆற்றல் மற்றும் திறன் கொண்ட 1.0 டிஎஸ்ஐ மற்றும் 1.5 டிஎஸ்ஐ எஞ்சின் வாய்ப்புகளுடன், டிரான்ஸ்மிஷன்களுக்கு சிக்ஸ் ஸ்பீட் மேனுவல், சிக்ஸ் ஸ்பீட் ஆட்டோமேடிக் மற்றும் செவன் ஸ்பீட் டிஎஸ்ஜி-ஐக் கொண்டுள்ளது.  இரு கார்களிலும் உள்ள டாப்-ஆஃப்-தி-லைன் வேரியண்ட்கள், ஓட்டுனர் மற்றும் துணை ஒட்டுனருக்கு துறையிலேயே முதன் முதறையாக, ஃபுட்வெல் பகுதி ஒளிரும் வகையில், மின் இருக்கைகள் , டேஷ் போர்ட் மையத்தில் ஸ்கோடா ப்ளே செயலியின் 25.4 செமீ அகலத்தில் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராயிட் ஆட்டோ ஆகிய அம்சங்களுடன் வருகிறது. முழு அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு பொதுவான ஸ்டைல் மற்றும் அதனினும் அடுத்த உயர் ரகங்களில் மட்டுமே காணப்பட்ட நிலையில், சமீபத்திய அப்டேட்களில், வாடிக்கையாளர் மதிப்பை மேம்படுத்த, ஆம்பிஷன் உள்ளிட்ட நடுத்தர ரகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

இது குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் பீட்டர் ஜெனிபா கூறுகையில் ‘பாதுகாப்பிற்கு நாங்கள் தரும் முக்கியத்துவம், எங்களது மனிதநேய அணுகுமுறையை உள்ளடக்கியதுடன், குடும்ப பிராண்டாக இருப்பதில் எங்கள் கவனத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அடிப்படை வேரியண்ட்களில் ஃப்ர்சண்டல் ஏர்பேக்குகள் மற்றும் உயர்  வேரியண்ட்களில் ஆறு என, ஒவ்வொன்றும் மற்றொன்றைப் போலவே பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எங்களது எம்ஒய்24 அப்டேட்களின் ஒரு பகுதியாக குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகியவற்றின் அனைத்து வேரியண்ட்களிலும் ஆறு ஏர்பேக்குகளை இப்போது வழங்குகிறோம்’ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form