போக்கோவின் எஃப்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்



 குவால்கம் டெக்னாலஜீஸ் நிறுவனம் அதன் ஸ்நாப்டிராகன் 8எஸ் ஜென் 3 மொபைல் பிளாட்ஃபார்மை புதுடெல்லியில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பு நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியது. இது ஸ்நாப்டிராகன் 8 சீரிஸில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தலைசிறந்த ப்ரீமியம் அனுபவங்களை வழங்கக்கூடிய ஒரு புராசஸர் ஆகும். இதே நிகழ்ச்சியில், போக்கோ மொபைல் நிறுவனம் ஸ்நாப்டிராகன் 8எஸ் ஜென் 3 மொபைல் பிளாட்ஃபார்மில் இயங்கக்கூடிய புத்தம் புதிய போக்கோ எஃப்6 மொபைலை இந்த மாதத்தின் கடைசியில் வெளியிடவுள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் இந்தியாவில் இந்த புராசஸருடன் ஸ்மார்ட்ஃபோன் வெளியிடும் முதல் பிராண்டுகளில் ஒன்றாக போக்கோ திகழ்கிறது.

செயற்கை நுண்ணறிவு அம்சங்களை செயல்படுத்தும் ஆற்றல், ஆல்வேஸ்-சென்சிங் ஐஎஸ்பி, மிகவும் தத்ரூபமான மொபைல் கேமிங் அம்சங்கள், அற்புதமான கனெக்டிவிட்டி, மற்றும் லாஸ்லெஸ் ஹை-டெஃப்னிஷன் சவுண்ட் என இந்த ரக பிளாட்ஃபார்மில் பல்வேறு பிரீமியம் அம்சங்கள் நிறைந்துள்ளன. பைச்சுவான்-7பி, லாமா 2 மற்றும் ஜெமினி நானோ போன்ற பிரபலமான பல லார்ஜ் லேங்குவேஜ் மாடல்கள் உள்ளிட்ட ஏஐ மாடல்களை இந்த பிளாட்ஃபார்ம் ஆதரிக்கும்.

போக்கோ உடனான நல்லுறவு குறித்து பேசிய, குவால்கம் இந்திய நிறுவனத்தின், சீனியர் வைஸ் பிரசிடென்ட் மற்றும் பிரசிடென்ட், சாவி சோயின், “எங்களது சமீபத்திய ஸ்நாப்டிராகன் 8எஸ் ஜென் மொபைல் பிளாட்ஃபார்மானது ஃபிளாக்ஷிப் தரத்திலான அனுபவத்தையும், சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்திறன் அம்சங்கள், மற்றும் ஏஐ அனுபவங்களையும் வழங்குகிறது. ஒவ்வொரு மக்களுக்கும் அவர்களது பட்ஜெட்டில் சிறந்த தரத்திலான ஸ்மார்ட்ஃபோன் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக போக்கோ மற்றும் குவால்கம் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து உறுதியுடன் செயல்படுகிறது. குறிப்பாக சாதனத்திலேயே சமீபத்திய ஏஐ அனுபவத்தினை  மக்களுக்கு வழங்க பிரத்தியேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திறன்கள் இந்த புராசஸரில் உள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாதனத்தின் மூலம் இந்தியாவில் உள்ள மக்களுக்கு மேற்கூறிய அற்புதமான அனுபவங்கள் கிடைக்கவுள்ளது” என்றார்.

இந்த பிளாட்ஃபார்மின் செயல்திறன்கள் குறித்துப் பேசிய, குவால்கம் இந்தியா பிரைவேட் லிமிடெட் இந்தியா நிறுவனத்தின், கம்ப்யூட் மற்றும் எக்ஸ்ஆர் பிஸ்னஸ் டெவலப்மெண்ட் பிரிவின் லீட், சௌரப் அரோரா, ”ஸ்நாப்டிராகன் 8எஸ் ஜென் 3 புராசஸரின் ஆற்றலுடன் வரும் போக்கோ எஃப்6 ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்வது குறித்து நாங்கள் மிகுந்த உற்சாகமடைகிறோம். சாதனத்திலேயே செயல்படும் ஜெனரேட்டிவ் ஏஐ, மேம்பட்ட போட்டோகிராஃபி அம்சங்கள், மிகவும் தத்ரூபமான மொபைல் கேமிங் அம்சங்கள், அதிவேக கனெக்டிவிட்டி, மற்றும் லாஸ்லெஸ் ஹை-டெஃப்னிஷன் சவுண்ட் உள்ளிட்ட திறன்களைக் கொண்ட இந்த ஸ்நாப்டிராகன் 8எஸ் ஜென் 3 புராசஸர் - உங்களுக்குப் பிடித்தமான ஸ்நாப்டிராகன் 8-சீரிஸ் பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மிகச்சிறந்த பயனர் அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்” என்றார்.

இதுகுறித்து பேசிய போக்கோ நிறுவனத்தின் கண்ட்ரி ஹெட், ஹிமான்ஷு டாண்டன், “இந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் புதுமைகளின் முன்னோடியாக இருக்கும் போக்கோ குவால்கம் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து எங்களது சமீபத்திய தயாரிப்பினை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். போக்கோ எஃப் சீரிஸ் ரக ஸ்மார்ட்ஃபோன்கள் - செயல்திறன் மற்றும் புதுமையான அம்சங்களுக்கு பெயர்பெற்றவையாகும். இந்த பெருமையை தொடரும் விதமாக, அறிமுகம் செய்யப்பட்டுள்ள போக்கோ எஃப்6 - இந்தியாவிலேயே முதல் முறையாக ஆற்றல் மிக்க ஸ்நாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டுடன் வரும் ஸ்மார்ட்ஃபோனாக இத்துறையில் புரட்சியை ஏற்படுத்தவுள்ளது. ஃபிளாக்ஷிப் தரத்திலான க்வால்காம் சிப்செட்களை எங்களது எஃப்-சீரிஸ் ரக போன்களில் தொடர்ந்து வழங்குவதன் மூலம், மொபைல் துறையில் முன்னோடியாக இருந்துவருகிறோம். இதன் மூலம் சாதனத்திலேயே செயல்படும் ஆன்-டிவைஸ் இன்ட்டெலிஜென்ஸ் மற்றும் அதிநவீன ஏஐ அனுபவங்களை நோக்கி இத்துறையை வழிநடத்தி வருகிறோம்” என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form