ஸ்கோடாவின் 360டிகிரி டிஜிட்டல் செயல்பாடுகள் அறிமுகம்

ஸ்கோடா ஆட்டோ இந்தியா ஏற்கனவே தனது புதிய காம்பேக்ட் எஸ்யூவி அறிவிப்பு மூலம் புதிய சகாப்தத்தில் தடம் பதித்துள்ளது. பயனர் ஈடுபாடு, வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றுடன், புதிய சகாப்தத்தில் மேலும் முன்னேறி,  ஸ்கோடா நிறுவனம் 360 டிகிரி டிஜிட்டல் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தியது.  இது முக்கிய லேண்ட்மார்க் விற்பனை சாதனையை எட்ட உதவியதுடன், வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாகவும் உறுதுணையாக இருந்தது.  

உங்கள் ஸ்கோடாவிற்குப் பெயர் சூட்டுங்கள் பிரச்சாரத்தின் விளைவாக இன்று வரை 1,50,000க்கும் மேற்பட்ட பெயர்கள் பதிவாகி உள்ளன. அவற்றில் 21,000க்கும் அதிகமானவை தனிப்பட்ட பெயர்கள் ஆகும். தனது லேண்ட்மார்க் தருணத்தை ஸ்கோடா ஆட்டோ இந்தியா கொண்டாடியது.  1999 டிசம்பரில் இந்நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் குறிக்கும் வகையில், ஏராளமான சலுகைகளை 2024 மார்ச் 24 அன்று 24 மணி நேரத்திற்கு டிஜிட்டல் தளத்தில் வழங்கியது.  24 மணி நேரத்தில் 709 மகிழுந்துகள் முன்பதிவாயின.

ஸ்கோடா கியர்ஹெட்ஸ் - ஆட்டோமொபைல்களில் ஆர்வமுள்ள தனிநபர்களின் சமூகத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முதல்-வகையான நாடு தழுவிய பிரத்யேக உறுப்பினர் திட்டமாகும்.  உறுப்பினர்களுக்கு ஸ்கோடா நிகழ்வுகளில் விஐபி மரியாதை, மகிழுந்து மற்றும் சேவை பொருட்கள் வாங்குவதற்கான பிரத்யேக பலன்கள், வரவிருக்கும் அறிமுகங்கள் மற்றும் புதுமைகள் பற்றிய உள் அறிவிப்புகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சக ஆர்வலர்களுடன் தனித்துவ ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் கூட்டங்கள் ஆகியவற்றுக்கான அழைப்புகளும் கிடைக்கும்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் டிஜிட்டல் முயற்சியானது சில ஆண்டுகளுக்கு முன் தீவிரமாக அமலானது. அப்போது இந்தியாவிலேயே முதல் முனைவாக இந்நிறுவனம், இந்தியாவிலுள்ள அதன் அனைத்து ஷோரூம்களையும், இடைச்செயல் அட்டவணைகள், அதிவேக ஆழமான அனுபவங்கள் மற்றும் தொழில்துறையில் முதன் முதலாக டிஜிட்டல் கார் தகவல் நிலையத்துடன் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கியது. 

2023இல் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், சர்வீஸ் சிஏஎம் முனைவையும் அறிமுகப்படுத்தியது. கைபேசியுடன் இணைக்கப்பட்ட செயலி அடிப்படையிலான இந்த அமைப்பு மூலம், வாடிக்கையாளர் பழுது நீக்கும் பணிக்கு விடப்பட்ட தங்களது மகிழுந்தை, எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணித்து, தேவையான சேவையை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். இந்த டிஜிட்டல் செயலி, வாடிக்கையாளரின் உரிமை அனுபவைத்தை மேம்படுத்துவதுடன், வெளிப்படைத் தன்மையையும் அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் ஜனேபா கூறுகையில், “வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களிடம் எங்கள் பொருள்கள் மற்றும் சேவைகள், அவர்கள் விரும்பும் மொழியில் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில் எங்கள் டிஜிட்டல் உத்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அறிமுகமாகவுள்ள அனைத்தும் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி-க்கான ‘உங்கள் ஸ்கோடாவுக்குப் பெயர் சூட்டுங்கள்‘ பிரச்சாரம் இதுவரை 1,50,000 பரிந்துரை நுழைவுகளை ஈர்த்துள்ளது. இந்தியாவில் தடம் பதித்த 24 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், சமீபத்தில் நிறைவடைந்த, முதன் முதலாக அறிமுகமான, முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, 24 மணி நேர விற்பனையில் 709 ஸ்கோடா மகிழுந்துகள் ஒரே நாளில் முன்பதிவாயின.   எங்களது ஸ்கோடாவெர்ஸ் இந்தியா என்எஃப்டி-ஐ,  ஸ்கோடா கியர்ஹெட்ஸ் அறிமுகம் மூலம் மேலும் விரிவுபடுத்தி உள்ளோம்.  இந்த பரந்த மற்றும் மாறுபட்ட சந்தையில், இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவு செய்ய, அவர்களைச் சென்றடையும் வழிகளை நாங்கள் தொடர்ந்து ஏற்றும், மாற்றியமைத்தும் வருகிறோம்‘ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form