இந்தியாவின் முன்னோடி சொத்து மறுசீரமைப்பு நிறுவனமான ஆர்சில் நிறுவனம் கோவையில் உள்ள ஜெயின் மெடிக்கல் அன்ட் டயாலிசிஸ் சென்டருக்கு டயாலிசிஸ் கருவியையும், ஜி. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் பிறவி இதய நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவியையும் வழங்கியது. சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய மக்களுக்கு உதவிடும் வகையில் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் கீழ் இந்த நலத்திட்ட உதவிகளை ஆர்சில் நிறுவனம் வழங்கி உள்ளது.
கோயம்புத்தூரில் ஜெயின் மெடிக்கல் அன்ட் டயாலிசிஸ் சென்டர் கோவையில் செயல்பட்டு வருகிறது. இது பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு சலுகை கட்டணத்தில் டயாலிசிஸ் மற்றும் பிற மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.டயாலிஸ் சிகிச்சைக்கு ஒரு முறைக்கு 1100 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் சூழலில் இம்மையம் டயாலிசிஸ் சிகிச்சைக்கு 300 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறது. தற்போது, ஆர்சில் மூலம் தேவையான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக பெற்று இருப்பதன் மூலம், இங்கு ஒரு மாதத்தில் தோராயமாக 700 முதல் 750 முறை டயாலிசிஸ் சேவையை செய்ய முடியும்.
கோவை ஜி. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனைக்கு, ‘சிறு இதயங்களை குணப்படுத்தும் திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ் ஆர்சில் நிறுவனம் நிதியுதவி வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் சலுகை கட்டணத்தில் 0 முதல் 18 வயது வரையிலான இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு சிகிச்சைக்கு வரும் மாத வருமானம் 20 ஆயிரத்துக்கு மிகாமல் உள்ள குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்கான நிதி உதவியை ஆர்சில் வழங்குகிறது.
இது குறித்து ஆர்சில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான பல்லவ் மொஹபத்ரா கூறுகையில், சமூக நல்வாழ்வுக்கு எங்களின் பங்களிப்பு குறித்து எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வுக்கான அர்ப்பணிப்புடன் சிறந்த மருத்துவ வசதிகளை பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற எங்களின் உறுதிப்பாட்டையும் காட்டுகிறது.சமூக முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார்.