ஸ்ரீநகரில் ராணுவ மருத்துவமனைக்கு அதிநவீன சிடி ஸ்கேன் கருவி வழங்கல் இந்திய தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இஐஎல்) சிஎஸ்ஆர் செயல்பாடுகளை செயல்படுத்தும் பிரிவான என்எஸ்இ அறக்கட்டளை, ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள இந்திய இராணுவத்தின் மதிப்புமிக்க 92 அடிப்படை மருத்துவமனையில் அதிநவீன சிடி ஸ்கேன் பிரிவை உருவாக்கியுள்ளது. இதனை லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் (15 கார்ப்ஸ் கமாண்டர்) மற்றும் என்எஸ்இஐஎல் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ்குமார் சவுகான் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

இந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட உபகரணங்கள் ஜிஇ (ரெவொலிசன் மேக்ஸிமா) இன் சமீபத்திய மாடலாகும். இது ஒரு சக்திவாய்ந்த, உயர் செயல்திறன் மற்றும் நம்பகமான சிடி ஸ்கேனர் ஆகும். ஸ்கேனரில் நோயாளியை தானாகவே மையப்படுத்தும் ஏஐ - அடிப்படையிலான தொழில்நுட்பம் உட்பட பல புதுமையான தொழில்நுட்பங்களை இது கொண்டுள்ளது. இதன் விளைவாக, நோயாளிகளை விரைவாகவும் துல்லியமாகவும் ஸ்கேன் செய்ய முடியும், இது காத்திருப்பு நேரத்தைக் குறைத்து சிறந்த சிகிச்சைக்கு வழிவகுக்கிறது.

என்எஸ்இ நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ்குமார் சௌஹான் கூறுகையில், “நமது நாட்டை தன்னலமின்றி பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆயுதப்படைகளுக்கு சேவை செய்ய என்எஸ்இ உறுதிபூண்டுள்ளது. நமது தேசிய எல்லைகளைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் நமது வீரர்களின் நல்வாழ்வுக்கு பங்களிக்கும் இந்த வாய்ப்பை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் சுகாதாரத் தேவைகளுக்கு இந்த முயற்சி உதவுமென நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form