கார்பன் தடத்தை குறைக்க நியூகோவின் புதிய மின்சார பேருந்து சேவை அறிமுகம்

காலநிலை மாற்றத்தையும் சுற்றுச்சூழல் கவலைகளையும் நாம் எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில், நமது அன்றாட வாழ்வில் நிலையான நடைமுறைகளை கடைப்பிடிப்பது மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது.  சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும், நமது கிரகத்திற்கு தூய்மையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பங்களிக்க முடியும். பசுமைப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தவும் நகரங்களுக்கு இடையிலான நிலையான பயண விருப்பங்களை வழங்க புரட்சிகர மின்சார பேருந்து சேவையை நியூகோ அறிமுகப்படுத்துகிறது.

நகரங்களுக்கு இடையே மேற்கொள்ளும் பயணத்தைப் பொறுத்தவரை, நியூகோ தனது புதுமையான மின்சார பேருந்து சேவையில் முன்னணியில் உள்ளது. இந்தூர்-போபால், டெல்லி - சண்டிகர், டெல்லி - ஆக்ரா, டெல்லி - டேராடூன், டெல்லி - ஜெய்ப்பூர், ஆக்ரா - ஜெய்ப்பூர், பெங்களூரு - திருப்பதி, சென்னை - திருப்பதி, சென்னை - பாண்டிச்சேரி மற்றும் ஹைதராபாத் - விஜயவாடா,  போன்ற வழித்தடங்களுக்கு நியூகோ நிலையான மற்றும் வசதியான பயணத் தீர்வை வழங்குகிறது.  

இந்த மின்சார பேருந்துகள் சுத்தமான எரிசக்தி ஆதாரங்களால் இயக்கப்படுகின்றன, பூஜ்ஜியம் டெயில்பைப் உமிழ்வை வெளியிடுகின்றன. நியூகோ-வைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பயணிகள் தங்கள் கார்பன் தடத்தைக் கணிசமாகக் குறைக்கும் அதே வேளையில் வசதியான மற்றும் நம்பகமான போக்குவரத்தையும் அனுபவிக்கலாம்.

கிரீன்செல் மொபிலிட்டியின் சிஇஓ மற்றும் எம்டி தேவேந்திர சாவ்லா, "நிலையான போக்குவரத்து என்பது ஒரு விருப்பம் மட்டுமல்ல; பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதில் இது ஒரு முக்கிய பகுதியாகும். எங்கள் மின்சார பேருந்து சேவையின் மூலம், பயணிகளுக்கு பாதுகாப்பான, நிலையான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் மற்றும் அவை பாரம்பரிய நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக உள்ளது” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form