நார்டன் சர்வதேச அளவில் தனக்கே உரிய தனித்துவத்தை இன்றைய தலைமுறைக்கும் வழங்கும் புதிய 450 சிசி அர்பன் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துகிறது!


பிரிட்டிஷ் இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் தனது புத்தம் புதிய 450சிசி அர்பன் மோட்டார்சைக்கிளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக இது அமைந்துள்ளது.இந்த புதிய 450 சிசி மோட்டார்சைக்கிள், நார்டனின் புகழ்பெற்ற வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் நுணுக்கமான வடிவமைப்புக் கொள்கைகளை முற்றிலும் புதியதொரு வாகனப் பிரிவுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.  எளிய மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு அபாரமான செயல்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக், நார்டன் நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் ஒரு மாபெரும் விரிவாக்கத்தைக் குறிக்கிறது.

நார்டனின் புதிய தயாரிப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில், 454 சிசி லிக்யூட்-கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்சினை கொண்டுள்ளது. 45 என்எம் டார்க்கை வெளிப்படுத்துவதோடு, வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு கட்டுப்பாட்டை வழங்குகிறது. இதன் வலிமையான அலுமினிய பிரேம் பைக்கை எளிதாக கையாள்வதை  உறுதி செய்கிறது. பைக்கின் முக்கிய சிறப்பம்சமாக, இதில் இடம்பெற்றுள்ள 8 இன்ச் டிஎஃப்டி  தொடுதிரை, அதிநவீன கனெக்டிவிட்டி அம்சங்களுடன் ஒரு முற்றிலும் புதிய நவீன டிஜிட்டல் அனுபவத்தை வழங்குகிறது.

ஒரு சிறந்த பைக்கின் வடிவமைப்பு என்பது வெறும் எஞ்சின் திறனையோ அல்லது அதன் வகையையோ மட்டுமல்லாமல் அந்த வாகனத்திற்கும் ரைடருக்கும் இடையே ஏற்படும் உணர்வுபூர்வமான பிணைப்பு  முக்கியம் என்ற நார்டனின் ஆழமான நம்பிக்கையை இந்தப் புத்தம் புதிய இந்த 450சிசி மோட்டார்சைக்கிள் மிகச் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது. இதில் சரியான விகிதாச்சாரங்களில் உருவாக்கப்பட்டுள்ள வாகன பாகங்கள்  கம்பீரமான தோற்றம் அதிநவீன மேற்பரப்புகள்  மற்றும் ஒவ்வொரு சின்னஞ்சிறு விஷயத்திலும் காட்டப்படும் துல்லியமான கவனம் ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாகும்.

டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் தலைவர் சுதர்சன் வேணு நார்டன் பிராண்டின் சிறப்புகள் குறித்துத் தெரிவிக்கையில், "நார்டன் மோட்டார்சைக்கிள் என்பது தனித்துவமான குணம், அசத்தலான வடிவமைப்பு, நேர்த்தியான பொறியியல் மற்றும் ரைடர்களுடன் அது ஏற்படுத்தும் உணர்வுபூர்வமான பிணைப்பு மூலமே எப்போதும் அடையாளம் காணப்படுகிறது.  நவீன வடிவமைப்பு மற்றும் அசாத்திய செயல்திறனுடன் நார்டன் பிராண்டை நவீன காலத்திற்கு ஏற்ப எவ்வாறு மாற்றிமைத்துள்ளோம் என்பதை  இந்த புத்தம் புதிய 'நார்டன் 450 அர்பன்' மோட்டார்சைக்கிள் மூலம் காட்டியுள்ளோம். இது எங்களுடைய தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்துவது பற்றியது மட்டுமல்ல; மாறாக, ஒவ்வொரு பைக்கும் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டதாகவும், நாம் பார்க்கும் போதே இது ஒரு 'நார்டன்' பைக்தான் என்று உணரச் செய்வதுமாகும். உலகெங்கிலும் உள்ள பைக் பிரியர்களுக்காக நார்டனின் புத்தம் புதிய தலைமுறை மோட்டார்சைக்கிள்களை நாங்கள் வெற்றிகரமாக உருவாக்கி வருகிறோம்.  பிரத்தியேகமான வடிவமைப்பு, சிலிர்ப்பூட்டும் செயல்திறன் மற்றும் மன நிறைவான உரிமையாளர் அனுபவம் ஆகியவற்றுக்காக உலகளவில் மதிக்கப்படும், நவீன மோட்டார்சைக்கிள் உலகின் மிக விரும்பத்தக்க பிராண்டாக 'நார்டன்' நிறுவனத்தை உயர்த்துவதே எங்களுடைய இலக்காகும்" என்றார்.

உலகப் புகழ்பெற்ற வடிவமைப்பு நிறுவனமான ஃபாஸ்டர் + பார்ட்னர்ஸ் உடன் இணைந்து, நார்டன் நிறுவனம் தனது உலகளாவிய சில்லறை விற்பனை செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் நீண்டகால முதலீடுகள் மற்றும் இங்கிலாந்து, இத்தாலி, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள மேம்பட்ட பொறியியல் மையங்களின் ஆதரவுடன், பிரிட்டிஷ் பாரம்பரியத்தையும் சர்வதேச பொறியியல் திறன்களையும் இணைத்து நார்டன் தனது மறுஎழுச்சிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. தற்போது 10 முக்கிய சந்தைகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இந்தியா மற்றும் அமெரிக்க சந்தைகளில் அறிமுகமாவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், புதிய 450 சிசி மோட்டார்சைக்கிளை 2027-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ மாடல் பெயர் வெளியீட்டுக்கு முன்பாக அறிவிக்கப்படும்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form