நார்டன் மேங்க்ஸ் ஆர், வடிவமைப்பு மேன்மைக்கான 'ரெட் டாட்: பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்' விருதை வென்றது!


நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், 2026  டிசைன் கான்செப்ட் பிரிவில் மேங்க்ஸ் ஆர் மாடலுக்காக 'ரெட் டாட்: பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்' விருதை வென்றுள்ளது.  சர்வதேச வடிவமைப்புப் போட்டியின் மிக அதிகம் விரும்பப்படும் விருதுகளில் ஒன்றைப் பெற்றுள்ளது.கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம், நார்டனுக்கு ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய சாதனையாகவும், பிராண்டின் மறுமலர்ச்சி பயணத்தில் உள்ள ஆக்கப்பூர்வமான முயற்சிக்குக் கிடைத்த சக்திவாய்ந்த அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது.

இவ்விருதைப் பெற்றிருப்பது குறித்து பேசிய நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவின் தலைவர் சைமன் ஸ்கின்னர், “'பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்' என்பது ரெட் டாட் வழங்கக்கூடிய மிக வலுவான அங்கீகாரமாகும், மேலும் இது மேங்க்ஸ் ஆர் மாடலை உயிர்ப்பித்த குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சொந்தமானது. நடுவர் குழு வடிவமைப்பை ஒரு கற்பனையான கருத்தாக மட்டும் அங்கீகரிக்காமல், வாடிக்கையாளர்கள் இப்போது பார்க்கக்கூடிய, தொட்டு உணரக்கூடிய மற்றும் சவாரி செய்யக்கூடிய ஒரு முழுமையான  மோட்டார்சைக்கிளை அங்கீகரித்துள்ளதுதான் இந்த வெற்றியை வலிமையானதாக்குகிறது. இன்று மேங்க்ஸ் ஆர் வாகனத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் எங்கள் குழுவின் படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பையும், மோட்டார்சைக்கிள் துறையில் நவீனத்துவத்தைக் கொண்டுவருவதற்கான எங்கள் லட்சியத்தையும் கொண்டாடும் வகையில் அமைந்திருக்கிறது.” என்றார்.

மேங்க்ஸ் ஆர் நார்டன் அதன் ஃபேரிங், டேங்க் மற்றும் பின்பகுதி ஆகியவை ஒரு ஒருங்கிணைந்த உருவமைப்பை உருவாக்குகின்றன. வெளிப்புறமாகத் தெரியும் இயந்திர பாகங்கள் நுணுக்கமான வடிவமைப்பின் அடையாளமாக கருதப்படுகின்றன. செழுமையான ஃபினிஷ்கள், தொடு உணர்வு சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் கவனமாக மறைக்கப்பட்ட வாகன உடற்பகுதியின்  இணைப்புகள் ஆகியவை இந்த மோட்டார்சைக்கிளின் குணாதிசயத்திற்கும் விருப்பத்தக்க தன்மைக்கும், வடிவமைப்பின் சிறப்பிற்கும் நார்டன் அளித்திருக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன.

உலகத்தரம் வாய்ந்த சொகுசுக் கைக்கடிகாரத் தயாரிப்பில்  பின்பற்றப்படும் உச்சபட்சத் துல்லியம் மற்றும் நுண்ணிய வேலைப்பாடுகளின் உத்வேகத்தில், நார்டன் மேங்க்ஸ் ஆர் மாடலின் ஒவ்வொரு செயல்பாட்டு உதிரிபாகமும் அதன் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரத்தியேக வடிவமைப்பு அம்சங்களாகவே மாற்றப்பட்டுள்ளன. பயன்படுத்தப்பட்டுள்ள உயர்தர மூலப்பொருட்கள், பளபளப்பான மேற்பரப்புகள் மற்றும் ரைடர்கள் தொட்டு இயக்கும் டச் பாயிண்ட்களில் செலுத்தப்பட்டுள்ள அதீத கவனம், இந்த மோட்டார்சைக்கிளின் வெளிப்புற தோற்றத்தின் கவர்ச்சியில் தொடங்கி, அதைச் சாலையில் ஓட்டும் ரைடரின் ஒட்டுமொத்தப் பயண அனுபவம் வரை நீளும் ஆழமான ஒரு பிணைப்பை உருவாக்குகிறது.

மேங்க்ஸ் ஆர் நார்டன் நிறுவனத்தின் நவீனத்துவம் பொறியியல் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு ஒருங்கிணைப்பு உணர்வுப்பூர்வமான  தயாரிப்பு வாடிக்கையாளர்களுடனான உறவு ஆகிய நான்கு முக்கிய வடிவமைப்புத் தத்துவங்களை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதன் வடிவமைப்பிற்கான வழிகாட்டுதல் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைமைப் படைப்புருவாக்க ஆலோசகரான பேராசிரியர் ஜெர்ரி ஓபிஇ அவர்களால் வடிவமைக்கப்பட்டது.

2026 சர்வதேச வடிவமைப்பு மேன்மை விருதுகளில் மேங்க்ஸ் ஆர் பெற்ற விருதைத் தொடர்ந்து இந்த ரெட் டாட் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த சர்வதேச விருதுகள் இணைந்து நார்டனின் வடிவமைப்பு திறனின் வலிமையையும், ஒரு நவீன ஆடம்பர செயல்திறன் பிராண்டாக அதன் எழுச்சியையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

நார்டன் நிறுவனத்தின் வடிவமைப்பு லட்சியமானது இருசக்கர வாகன உற்பத்தியோடு மட்டும் நின்றுவிடாமல், அதன் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் அனுபவத் தளங்கள் வரை பரந்து விரிந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, உலகப் புகழ்பெற்ற சர்வதேசக் கட்டடக் கலை நிறுவனமான 'ஃபாஸ்டர் + பார்ட்னர்ஸ்' (உடன் நார்டன் மேற்கொண்டுள்ள கூட்டு முயற்சியானது, ஒரு புதிய சர்வதேச ரீடெய்ல் அனுபவக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form