டிவிஎஸ் மோட்டார் இளைய தலைமுறை ரைடர்களை கவரும் புதிய தோற்றத்தில் ‘டிவிஎஸ் ரேடியான்’ மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது!


டிவிஎஸ் வேணு குழுமத்தின் ஒரு அங்கமும், இருசக்கர மற்றும்  மூன்றுசக்கர வாகன உற்பத்தியில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமுமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய வடிவமைப்புடன் கூடிய 'புதிய டிவிஎஸ் ரேடியான்' மோட்டார் சைக்கிளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ரேடியான் பைக் தனது பலமிக்க அம்சங்களை வைத்துக்கொண்டு, இன்றைய இளைஞர்கள் விரும்பும் வகையில் புத்தம் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது.

 புதிய டிவிஎஸ் ரேடியான் மோட்டார் சைக்கிள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து டிவிஎஸ் மோட்டார் டீலர்ஷிப்களிலும் பேஸ், டிஜி கிளஸ்டர் டிரம் மற்றும் டிஜி கிளஸ்டர் டிஸ்க் என  மூன்று வெவ்வேறு பதிப்புகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் தொடக்க வில்லை ₹67,100/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 புதிய டிவிஎஸ் ரேடியானில் பெட்ரோல் டேங்க், பக்கவாட்டு பேனல்கள்  மற்றும் பின்பக்க கௌல் ஆகியவை மிக நேர்த்தியாகவும் ஸ்போர்ட்டியாகவும் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய தலைமுறை தொழில்நுட்பத்திலான பவர்ஃபுல் ஃபுல் எல்இடி ஹெட்லைட்டும், அதன் தனித்துவமான சிக்னேச்சர் வெளிச்சமும் பைக்குக்கு கம்பீரமான தோற்றத்தைக் கூட்டுகின்றன. முகப்பு விளக்குடன் பொருத்தப்பட்டுள்ள எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் தோற்றத்தை மேம்படுத்துகின்றன.பின்பக்கத்தில் உள்ள '3டி டன்னல் எஃபெக்ட்'  கொண்ட புதிய எல்இடி டெயில் லேம்ப் வசதி அறிமுகமாகியுள்ளது. 

அத்துடன் பைக் ப்ரியர்களை வெகுவாகக் கவரும், எல்இடி இன்டிகேட்டர்கள், பைக்குக்கு ஒரு மாடர்ன் தோற்றத்தை வழங்குகிறது. இதில் இடம்பெற்றுள்ள  மாடர்ன் கிராபிக்ஸ் ஸ்டிக்கர்கள், பைக்கின் தோற்றத்திற்கு ஒரு தனி அடையாளத்தைக் கொடுக்கின்றன. இந்த பிரிவிலேயே மிக நீளமான இருக்கை வசதி இதிலும் தொடர்கிறது. அத்துடன், 'ஆர்டிஎம்ஐ' வசதி கொண்ட ரிவர்ஸ் எல்சிடி மீட்டர், ரைடர்களுக்குத் தேவையான தகவல்களை விரல் நுனியில் தருகிறது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பயணிகள் வாகனம் மற்றும் இவி வர்த்தகப் பிரிவுத் தலைவரும், கார்ப்பரேட் பிராண்ட் மற்றும் ஊடகப் பிரிவுத் தலைவருமான மூத்த துணைத் தலைவர் அனிருத்தா ஹல்தார் பேசுகையில், "  புத்தம் புதிய டிவிஎஸ் ரேடியானில் இன்றைய புதிய தலைமுறைக்கு ஏற்ற துடிப்பான தோற்றமும், ஸ்டைலான நவீன அம்சங்களும் கச்சிதமாகப் பொருந்தியுள்ளன. காலத்தால் அழியாத இன்ஜின் தரம் மற்றும் நம்பகத்தன்மையோடு புதிய சிக்னேச்சர் விளக்குகளும் கிராபிக்ஸும் இந்த பைக்கை மேலும் கம்பீரமாக்குகின்றன.தாங்கள் வாழும் வாழ்க்கையையும், இந்த நாட்டையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உழைக்கும் மக்களின் எண்ணங்களைப் போலவே, அவர்களின் பைக்கும் முற்போக்கான அடையாளமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form